பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பஞ்ச தந்திரக் கதைகள்

சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு புறாக்கள் கூட்டமாக இறங்கியதைக் கண்டவுடன், என்னவே ஏதோ என்று பயந்து போன அந்த எலி, தன் வளைக்குள்ளே ஒடிப்போய் ஒளிந்து கொண்டது.

அதன் வளைக்கு நேரே இறங்கிய புறாவரசன், 'நண்பா, நண்பா என் எலி நண்பா, இங்கே வா’ என்று வளைத்துளையில் மூக்கை வைத்துக்கொண்டு கூப்பிட்டது.

நண்பனின் குரலைக் கேட்டு வெளியில் வந்தது அந்த எலி. அது தன் நண்பன் நிலையைக் கண்டு மனம் வருந்தியது.

‘எதையும் முன்னும் பின்னும் சிந்தித்துச் செய்யக் கூடிய அறிவாளியான நீ எப்படி இந்த வலையில் சிக்கினாய்?’ என்று அந்த எலி கேட்டது.

'எவ்வளவு சிறந்த அறிவிருத்தாலும் எவ்வளவு சாமார்த்தியம் இருந்தாலும் விதியை மீறமுடியுமா? எந்த இடத்தில், எந்தக் காலத்தில், எப்படிப்பட்ட காரணத்தினால், யாரால் எவ்வளவு நல்வினை தீவினைகளின் பயனை அனுபவிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் அந்தக் காலத்தில், அப்படிப்பட்ட காரணத்தால், அவரால் அல்வளவும் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்!’ என்று புறா பதில் கூறியது.

கடலில் திரியும் பீன்களும், வானில் பறக்கும் பறவைகளும், தம்மைத் தொடர்ந்து வீசப்படுகின்ற