பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு

225

எல்லோரும் குளத்தில் குதித்தவுடன் கீழேயிருந்த பேய் அப்படியே வளைத்துப் பிடித்துச் சாப்பிட்டு விட்டது.

நெடுநேரமாகியும் குளத்தில் மூழ்கிய சேனா வீரர்களில் ஒருவர் கூட மேலே வரவில்லை. அவன் குரங்கைப் பார்த்து, 'ஏன் சேனைகள் இன்னும் மேல் வரவில்லை' என்று கேட்டான்.

குரங்கு பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஏறி நின்று கொண்டு, 'அரசனே, நீ என் குரங்குக்குலம் முழுவதையும் அழித்ததற்காகத்தான் நான் உன்னைப் பழிவாங்க வந்தேன். என் விருப்பம் நிறைவேறி விட்டது. உன் கையில் நான் என் வயிற்றுப் பசிக்குச் சோறு வாங்கி யுண்டபடியால், உன்னைப் பழி வாங்குவது துரோகம் என்று விட்டு விட்டேன்’ என்று சொல்லிக் கிளைக்குக் கிளை தாவி ஒடி மறைந்து விட்டது.

அரசன் மனவேதனையோடு நகருக்குத் திரும்பிச் சென்றான்.


11. குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு

மதுரை மாநகரில் பத்திரசேனன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் மகள் இரத்தினாவதி. அவள் அழகில் சிறந்தவள். அவளைக் கைப்பற்றக்

ப-15