பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பழிவாங்கிய குரங்கு

221

மறுநாள் இயக்கனிடம் சென்று வரம் கேட்டான். அவனும் மறுக்காமல் கொடுத்தான். வரம் பெற்றுத்தன் ஊருக்குத் திருப்பி வரும்போது அவனை மக்கள் பார்த்தார்கள். அவன் இரட்டைத் தலையையும் நான்கு கைகளையும் கண்டு இவன் யாரோ பெரிய அரக்கன் என்று நினைத்துக் கொண்டு ஊரில் இருந்தவர்கள் கல்லால் எறிந்து அவனைக் கொன்றுவிட்டார்கள்.


10. பழிவாங்கிய குரங்கு

ஒர் ஊரில் ஓர் அரசன் இருந்தான். அவன் ஒரு நாள் ஒரு குரங்கு ஆடுவதை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதன் பின் அரசன் தன் ஊரில் ஏராளமான குரங்குகளை வளர்த்து வந்தான்.

ஒரு நாள் அரண்மனை வேலைக்காரர்களுக்குள்ளே சண்டை ஏற்பட்டது. அதைக் கண்ட ஒரு கிழட்டுக் குரங்கு,'இந்தப் போர் பெரிதானால் தீமை ஏற்படும். நாம் ஏதாவது ஒரு காட்டுக்குப் போய் விடுவோம்’ என்று கூறியது.

‘ஒழுங்காகச் சாப்பாடு கிடைக்கிற இடத்தை விட்டுவிட்டு எங்கோ போக வேண்டுமென்கிறது இந்தக் கிழடு' என்று சொல்லி மற்ற சிறு குரங்குகள் எல்லாம் ‘வெவ்வெவ்வே' காட்டின.