பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது. வினேயினும், ஆடவர்க்குச் சிறப்புடைய வினை பிறிதின்மை யின், அதற்குரிய செல்வத்தை முற்கூறினள். 'நட்டோ சாக்கம் வேண்டியும் ஒட்டிய, கின்ருேள் அணிபெறவசற்கு, மன்ருே தோழியவர் சென்ற திறமே' (நற். 286) என்று பிறரும் கூறுதல்காண்க. இனி, செல்வமென்றது சான்ருேர், உயர்த்துக் கூறும் அருட்செல்வமெனக் கொண்டு, நீ யரு ளாமையால் இவ ளெய்திய அவலங் கண்ட துணையோரும் அருள்மேவிய தம் உள்ளம் மருளி ஆற்கு ராயினவியின், - யாமும் அத்தன்மையேமாய் வருந்துதல் செய்யா கின்றேம்' என்பாள் துணையோர் செல்வமும் யாமும் வருந்ததும் என்ருள் என்று σμ"aωτά. உடையாாது தொழில் உடைமை மேல் ஏற்றிக் கூறப்படும் இயைபினுல், வருத்தம் செல்வத் தோடும் இயைந்தது. "நெடிய மொழிதலும் கடியலுர்தலும், செல்வமன்று தன் செய் வினேப்பயனே, சான்ருேர் செல்வ மென்பது சேர்ந்தோர் புன்கணஞ்சும் பண்பின், மென்கட் செல்வம் (தற். 210) என்.அம், அருட்செல்வம் செல்வத் துட் செல்வம்' (குறள் 241) என்றும் சான்றேர் கூறினர். தலைமகள் முன்னின்து, அவனது பாத்தைமை மதுக் தல் வேண்டி, 'தஞ்சமருளாய் நீயே" என்றதஞல் அன்பின் மையும், 'துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்” என்றதனுல் கொடுமையும் கூறலின், மெய்ப்பாடு வெகுளி யும், பயன் வாயில் நேர்த்தலுமாம்; 'பரத்தைமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி, மடத்தகு கிழமை யுடைமை யானும், அன்பிலே கொடியை யென்றலும் உரியள்' (பொ. 158.) என்ற கல்ை, தலைவிக்கு உரிமை யெய்தும் இக் கூற்று, அவள் குறிப்பின்வழி மொழியும் தோழி க்கு ம் அமையுமாறு: கண்டுகொள்க. (0)