பக்கம்:பாரதித் தமிழ்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SS SSAS SSAS SSAS SSAS SSAS

இந்தமாதிரி அந்த ஜில்லாக்களில் வலிப்யோர் கட்டாய வேலைக்கு வரவேண்டுமென்று ஸ்ர்க்கா ருக்கும் அந்த ஜனங்களுக்கும் நெடுங் காலத்துக்கு முன்னே செய்துகொள்ளப்பட்டதோர் உடம்பா டிருக்கிறதாம்! பின் சந்ததியாரை ஜில்லாக்கணக்காக அடிமைகளாக இருக்கும்படி பூர்வ ஸந்ததியாரில் ஒரு சில மனிதர் எழுதிக் கொடுக்கும் உடம்பாடு செல்லாதென்பதை நம் அதிகாரிகள் அ றி ய மாட்டார்கள் போலும்! சென்ற 18 வருஷங்களாக இந்த அனுஷ்டானத்தை ஒழித்து விடும்படி அந்தப் பிரதேசத்தார் ஸர்க்காருக்கு ஓயாமல் விண்ணப்பஞ் செய்துகொண்டு வந்திருக்கிறார்கள். அந்த விண்ணப் பங்களே அதிகாரிகள் கழிவுக் காகிதக் குப்பையிலே போட்டுவிட்டுச் சும்மா இருந்து வருகிறார்கள்.

  • - اگهسر می சாத்விக எதிர்ப்பு

ஆளுல் இந்தியாவில் தோன்றியிருக்கும் புதிய ஸ்ாத்விக சக்தி ஸிம்லாக் குன்றுகளையும் சூழ்ந்து விட்டது. ஜனவரி 13-ஆம் தேதியன்று அல்மோரா ஜில்லாவிலுள்ள வியாகரேசுரம்’ என்ற ஊரில் ஒரு பெரிய சந்தை நடந்தது. அப்போது ஜனங்களெல் லாரும் கூட்டங் கூடிக் கூலி உதார்’ என்று வழங் கப்படும் இந்தக் கட்டாயக் கூலி முறைமைக்கு இனி உட்படுவதில்லையென்று பி ர தி க் கி னை செய்து கொண்டார்கள்.

இரண்டு மூன்று ஜில்லா வாளிகள் அத்தனை பேரையும் ஒருங்கே கூலியாட்களாகப் பாவித்து நடத்தும் இந்த மிருகத்தனமான முறைமையால், ஜனங்கள் சில ஸமயங்களில் பணியிலே மூட்டை சுமக்கமாட்டாமல் விறைத்துச் செத்துப் போய் விடுகிறார்கள். இந்த முறையினிடம் உண்டாகிய அருவருப்பு மிஞ்சி ஜனங்கள் கலகஞ் செய்யக்கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/433&oldid=605864" இலிருந்து மீள்விக்கப்பட்டது