பக்கம்:பாரதித் தமிழ்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக விநோதங்கள்

காளிதாஸன்

3 டிசம்பர் 1920 ரெளத்திரி கார்த்திரிகை 18

1. லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையும் ஒரு கிறிஸ்தவ குருவும்

“நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம்-சேர்ந்தாற் போல்'l-இங்கிலாந்தில், ஒரு கிறிஸ்தவ குரு தம் ஆலயத்தில் சிஷ்ய கணங்களுக்கு மதோபதேசம் செய்து வருமிடையே, லண்டன் டைம்ஸ்’ பத்திரி கையின் தேச பக்தியையும், உயர்ந்த லசுகியங் களையும், ஞான மஹிமை வாய்ந்த உபதேசங்களை யும், அச்சமற்ற பெருந் தன்மையையும் மிக வியந்து ஸ்தோத்ரம் பண்ணியதாக அந்தப் பத்திரிகையி லேயே ஒரு செய்தி ப்ரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.

தன் உற்பத்தி முதலாகவே, உலகத்து விடுதலை களையும் சீர்திருத்தங்களையும் எதிர்த்துக்கொண்டே வருவதும், அதுபற்றி அநேக மனுஷ்யாபிமானி களால் நிந்திக்கப்பட்டிருப்பதுமாகிய அப்பத்திரி கையை, உலகத்தாரெல்லாரும் பரஸ்பரமாகிய ஸகோதர உணர்ச்சியும், ஸ்மத்வ ஞானமும், மாருத அன்பு முடையோராக ஒழுக வேண்டும் என்று போதித்த ஏசுகிறிஸ்து நாதரின் ஸ்மய குரு ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/388&oldid=605792" இலிருந்து மீள்விக்கப்பட்டது