பக்கம்:பாரதித் தமிழ்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 பாரதி தமிழ்

ளென்று நினைக்க இடமில்லாமலிருக்கிறது. இந்தத் தீர்மானங்களை ஜெர்மானியர் அங்கீகரியாவிடின் அவர்களுக்கு விதிப்பதாக எண்ணியிருக்கும் தண் டனேகளுக்கிடையே அவர்களை ஸ்ர்வதேச ஸங்கத் தில் சேர்க்கமாட்டோமென்ப தொன்று. ஆல்ை அந்த ஸங்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ளும் படி ஜெர்மனி இன்னும் பிரார்த்தனை யனுப்பவில்லை யாதலால், அந்த தண்டனை அதிகமாகப் பொருட் படுத்தத் தக்கதன்றென்று வோன் ஸி மோன்ஸ் குறிப்பிட்டபோது “ரெயிக் ஸ்தாக்” அங்கத்தினர் கரகோஷம் புரிந்தார்களாம்.

அமெரிக்கப் பத்திரிகைகளிற் பெரும்பாலான வும், ராஜதந்திரிகளிற் பெரும்பாலோரும், இவ் விஷயத்தில் ஜெர்மனிக்கனுகூலமாகவே பேசுதல் குறிப்பிடத்தக்கது. ஜெர்மானியரால் இந்த பாரத் தைச் சுமக்க முடியாதென்றும், இந்த ஏற்பாட்டி விருந்து அமெரிக்க வியாபாரத்துக்கு இடையூறு விளேயுமென்றும் அமெரிக்காவில் பலமான நம்பிக்கை யேற்பட்டிருப்பதாக ராய்ட்டர் தெரிவிக்கிரு.ர். ஜனதிபதி வில்ஸனுடைய பத்திரிகையாகிய நியூ யார்க் உலகம்” என்பது,- ஜெர்மன் ஏற்றுமதி களின் மீது விதிக்கும் தீர்வையால் அமெரிக்கா வுக்கு ஏற்றுமதியாகும் வஸ்துக்களின் அ ள வு குறைந்துவிடும். இதினின்றும் விளைபொருள் வாங்கு வதற்கு வேண்டிய் நாணயம் ஜெர்மனிக்குக் குன்றிப் போகும். எனவே ஜெர்மனி மீளவும் உத்தாரணம் பெறுதல் இயலாது போய்விடும்’ என்றெழுது கிறது.

இவ்வாறு அமெரிக்காவில் ஜெர்மனிக்குத் தக்க உபபலமிருப்பதைக் கருதுமிடத்தே. வோன் மோன்ஸ் சொல்லியபடி நேசக் ககதியாரின் திட்டம் வெறும் மூடபக்தியாகத்தான் முடியுமென்ற எண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/445&oldid=605882" இலிருந்து மீள்விக்கப்பட்டது