பக்கம்:பாரதித் தமிழ்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பாரதி தமிழ்

தல் மூல ஸத்யங்களைப் பார்க்க மாட்டோமென்று கண்ணை மூடிக் கொள்வதேயாகும். இந்தியாவில் ப்ரிடிஷ் ராஜ்யத்தை ஆதரித்துப் பேசுவோர் இந் நாட்டிற்கு ப்ரிடிஷார் பரோபகார சிந்தனை கொண்டு மட்டும் வந்ததாகச் சொல்லுகிரு.ர்கள். இந்நாட்டு ஜனங்கள் தமக்குத் தாமே தீங்கு செய்து கொள்ளாமல் காக்கும் பொருட்டாகவும், நம்ம வரின் தர்ம நியாயத்தை உயர்த்தும் பொருட்டா கவும் லெளகிகச் செல்வம் ஏற்ப்டுத்திக் கொடுக் கும் பொருட்டாகவும், இதுபோன்ற பல காரணங் களின் பொருட்டாகவும் அவர்கள் இங்கு வந்த தாகச் சொல்லப்படுகிறது; இவையெல்லாம் பr பாதிகள் வழக்கமாகச் சொல்லும் அரைமொழிச் சொற்களேயாம். உண்மை யாதெனிலோ, ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுத்தப் பட்டது. இந்தியா வின் நன்மைக்காக அன்று. இந்தியாவினின்றும் பணத்தை ஏராளமாய்த் திரட்டிக்கொண்டு போய் ப்ரித்தானியாவுக்கு நன்மை செய்யும் பொருட்டாக ஏற்பட்டது. பொன்னசையுடன் மண்ணுசையும் கலந்தது. பிறகு கம்பெனியாரிடமிருந்து அரசு மகு டத்தின் கீழே கொண்டு வரப்பட்ட பின் பொருளா சையும் அதிகார ஆவலும் ஆட்சி செய்வோருக்குக் குறைவு படவில்லை. பேதம் யாதெனில், யதேச்சதி காரத்தை இப்பொழுது ஒழுங்குப்படி நடத்து கிறார்கள். அந்தக் கொள்ளை சாஸ்த்ர தோரணையில் நடந்து வருகிறது!’ என்று நம்முடைய ஜனசபைத் தலைவர் சொல்லுகிறார், “இஃதெல்லாம் ஜனங் களுக்குத் தெரியும். இது அவர்கள் நெஞ்சை உறுத்துகிறது. எனவே பண்டைச் செயல்களுக் கெல்லாம் இப்போது (ஆங்கில அதிகாரிகள்) பரிகா ரம் அல்லது ப்ராயச்சித்தம் செய்யவேண்டுமென்று ஜனங்கள் கேட்கிரு.ர்கள்’ என்று கூறி ஸய்யது இமாம் முடிக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/315&oldid=605679" இலிருந்து மீள்விக்கப்பட்டது