பக்கம்:பாரதித் தமிழ்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

று ரவீந்திரர் திக் விஜயம்

காளிதாஸன்

25 ஆகஸ்டு 1921 துன்மதி ஆவணி 10

“ மன்னற் குத் தன் தேச மல்லால் சிறப்பில்லை :

கற்ளுேர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு.’

ஆஹா, மனிதராகப் பிறந்தோரில் கீர்த்தி பெற்றால் மாத்திரம் என்ன ப்ரயோஜனம்? என் நண்பர் பெயர் சொல்லப்படாத ஒருவருக்குக்கூட ஒரிடத்தில், ஒரு கூட்டத்தினிடையே ஒரு ககதியா ருக்குள் ஒருவிதமான கீர்த்தி ஏற்பட்டிருக்கிறது.

நாளை அந்தக் ககதி புகையாய்விடும். அந்தக் கூட்டம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அந்தக் கீர்த்தி, ‘பொய்யாய்ப் பழங் கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமே.”

கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்த்ரரைப் போலே அடைய வேண்டும். வங்காளத்தில் மாத் திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி. ஆஸ்த்ரியா, பிரான்ஸ் பூமண்டல முழு மையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுகளோ வங்க பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புக்களைத்தான் உலகம் பார்த்திருக் கிறது. அதற்குத்தான் இந்தக் கீர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/511&oldid=605986" இலிருந்து மீள்விக்கப்பட்டது