பக்கம்:பாரதித் தமிழ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பாரதி தமிழ்

வீட்டில் களவு நடந்து பணமும் நகைகளுமாக ஐம் பதியிைரம் ரூபாய் போய்விட்டது. டாணுக்காரர் எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தும் துப்புத் துலங்க வில்லை. அதிலே பூச்சித்தேவன் சம்பந்தப்பட்டதாகக் குட்டையூரிலே மாத்திரம் விலருக்குச் சந்தேக மிருந்தது. ஆனல் அதை யாரும் அதிகாரிகளிடம் சொல்லத் துணியவில்லை. பூச்சித்தேவனுக்கு விரோத மாக சாகதி சொன்னல் தலை போய்விடுமென்ற பயம் எல்லாருக்குமிருந்தது. என்ன காரணத் தாலோ, பூச்சித்தேவன் பெரிய செல்வகிைவிட் டான். அரண்மனை வேலையிலிருந்தபடியாலும், ஜமீன்தார் இவனிடம் மிகுந்த பகrம் பாராட்டின படியாலும் இவனுக்குப் பணம் பெருகிய விஷயத்தில் யாருக்கும் ஆச்சரியமுண்டாகவில்லை. ஊரிலே பூச்சித் தேவர் என்ற பெயருண்டாற்று.

“அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பான். பூச்சித்தேவனுக்குக் கண், தலை தெரியவில்லை. ஊரில் யாரேனும் தன்னிடம் அவ மதிப்புக் கொண்டதாகச் சந்தேகமேற்பட்டால், அவர்களைத் தன் வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வரச் சொல்லி அடிப்பான். தெருவில் யாரேனும் “பூச்சி’ என்று சொன்னல் தன்னைத்தான் சொல்லு கிறார்களென்று சண்டைக்குப் போய் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவான். அந்தப் பாப்பாரப் பயல்’, ‘இந்த முதலிப் பயல்’ என்று யாரையும் இழி வாகப் பேசுவான். டம்பத்துக்காக ஒரு திண்ணேப் பள்ளிக்கூடம் ஏற்படுத்தினன். அங்கே காலையில் பிள்ளைகளெல்லாம். பூச்சியப்பத்தேவர் நீடுழி வாழ்க’ என்று சொல்லிப் பிள்ளையாரைக் கும்பிட்ட பிறகுதான் பாடஞ் சொல்லலாமென்று விதியேற் படுத்தினன். கிராமத்துப் பெண்களைக் கெடுக் கலானன். ஏழைகள் பணத்தை நானு விதங்களிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/199&oldid=605493" இலிருந்து மீள்விக்கப்பட்டது