பக்கம்:பாரதித் தமிழ்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500

ஜர்லாந்தும் இந்தியாவும்


                                   காளிதாஸன்

19 ஜூலை 1921

    மஹாயுத்தம் நடக்கும் காலத்தில்,எடிஸன் என்ற அமெரிக மின்ஸார சாஸ்திரியின் விலையுயர்ந்த ஆராய்ச்சிக் கூடமொன்று தீப்பட்டெறிந்து போயிற்று.
   அதுபற்றிச் சில நண்பர்கள் அவரிடம் துக்க விசாரணை புரிந்து கடிதமெழுதியிருந்தார்கள். அதற்கவர் சொன்னார் :-"என் கஷ்டம் ஒரு கஷ்டமா!அதோ! ஜெர்மனியில் கைஸர் சக்கரவர்த்தி இருக்கிறார், பாருங்கள். அவர் ஒருவரையும், அவருடைய பலமற்ற துணைவர் ஒரிருவரையும் எத்தனையோ அரசுகள் கூடி எத்தனையோ வகைகளால் போர் புரிகின்றன. அந்த ஒரு மனிதர் என்ன செய்வார், பாவம்! எனவே எனக்கு ஏதேனும் ஸங்கடம் நேரும் போதெல்லாம் நான் நம்மைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிக பயங்கரமான விபத்துக்களாலே சூழப்பட்டிருக்கும் கைஸ்ரை நினைத்து மனந் தேறுகிறேன்’ என்றாராம்.
  அக்காலத்தில் இக்கதை வெளியிடப்பட்டிருந்தது தொடர்ச்சியாகப் பத்திரிகை படித்து வரும் நண்பர்களிலே பலருக்கு ஞாபகமிருக்கலாம். அது போல், இந்தக் காலத்தில் நாம் மிஸ்டர் லாய்ட்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/500&oldid=1539900" இலிருந்து மீள்விக்கப்பட்டது