பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

கலீலியோவின்


ரோம் நாட்டு மக்கள், தாரைத் தப்பட்டைகளை அடித்து பெரிய ஓசைகளை எழுப்பி, தீவட்டி ஜோதி போல நெருப்புப் பந்தங்கனைக் கொளுத்தி அந்தப் பிசாசுகளை விரட்டினார்களாம்!

வட ஐரோப்பா நாடுகளிலே வாழ்ந்த மக்கள் ; இரண்டு கொடிய ஓநாய்கள் சூரியனை விழுங்க வருவதாக எண்ணி, பேரிரைச்சலிட்டு, அந்த விலங்குகளைத் துரத்தி யடித்தார்கள்.

வேறு சிலநாடுகள் தப்பட்டைகள் அடித்தும், கொம்புகள், சங்குகள் ஊதியும், ஓவென்று அந்த மக்கள் அலறிக் கூச்சலிட்டும், வெறியாட்டங்களை விருப்பம்போல் ஆடியும்-பாடியும், தண்ணீர் நிரம்பியுள்ள குளங்கள் ஏரிகளில் குதித்தும் வழிபாடுகளைச் செய்து சூரியனைக் காப்பாற்றினார்கள்.

கிரேக்க நாட்டு மக்கள்; 'ஜூபீடர்' என்ற கடவுள் நங்களது நடவடிக்கைகளைப் பிற கடவுள்கள் காணக் கூடாது என்பதற்காக சூரியனை ஒரு திரையால் மறைத்து உலகை இருட்டாக்கிவட்டார். என்று நினைத்து அவர்கள் நம்பினர்.

இந்திய மக்களும் சீன நாட்டு மக்களும் கேது என்ற கிரகமான பாம்பு சூரியனை விழுங்குவதாக நினைத்துக் கொண்டு இருப்பதை இன்றும் நாம் பார்த்து வருகிறோம்.

இவ்வளவு மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ள இந்த உலகத்தில், இந்தியா, எகிப்து, பாபிலோனியா போன்ற நாடுகளில் வாழ்ந்த வாணியல் வித்தகர்கள், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவைகளைப் பற்றிய உண்மைகளை அந்தந்த காலங்களில் கண்டுபிடித்து கூறினர்.

பழைய காலத்தில் வாழ்த்த மக்கள், நாம் வாழும் பூமி சலனமற்று நிற்பதாக நம்பினார்கள். சூரிய சந்திரர்-