பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை’ - ஓர் விமர்சனம்

சுசீலா கணேசன்

துணை பொதுநூலக இயக்குநர், சென்னை.



ண்-பெண் இருவரும் சமமானவர்கள் என்று இன்று பேசப்பட்டு வந்தாலும் ஆண் ஆதிக்கம் நிரம்பிய சமுதாயமாகத் தான் தொன்று தொட்டு இருந்துள்ளது என ஆணித்தரமாக எடுத்துச்சொல்லும் இந்த நூல் திருமதி. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் படைப்புக்களின் கோமேதகக் கற்களாகத் திகழ்கிறது.

இதிகாச காலத்திலிருந்து-இந்திரா காந்தி காலம் வரை. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் நிலை எப்படி எல்லாம் மாறுபட்டு வந்துள்ளது என்பதை அகநானூறு, புறநானூறு. சங்க நூல்கள் மட்டும் இன்றி புராண நூல்களிலிருந்தும் ருக்வேதத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டியுள்ள விதம் மிகவும் பாராட்டுதலுக்குரியது. “கடவுளின் மணவாட்டி” என்கிற அத்தியாயத்தில்—மகாபாரதத்தில் வரும் தீர்க்கமஸ் என்கிற ரிஷி—கண்ணற்றவர்—இவரது மனைவி—தன் கணவனின் இயல்பு கண்டு வெறுப்படைந்து—‘ஒருத்திக்கு ஒருவனே என்கிற விதி செய்து கணவன் மனைவி என்கிற உறவில் ஆணின் ஆதிக்கத்தைப் பெண் பொறுத்துத்தான் ஆக வேண்டும்; இல்லையேல் சபிக்கப்படுவாள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக-புராண மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

காந்தாரி ஏன் தன் கண்களைக் கட்டிக் கொண்டார்? கணவனால் பார்க்க முடியாததைத் தானும் பார்க்கக் கூடாது என்றா அல்லது குருடான கணவனைப் பார்க்க வேண்டாம் என்றா? என்று அறிவுக்குப் பொருந்தாத தகவல்களை மறு