பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

53



அந்த இருவர்களின் தாயார் வயதேறிய மூதாட்டி. அவள் ஒரு திருவிழாவிற்குப் போக ஆசைப்பட்டாள். நடக்க முடியவில்லை. அதனால், அந்தக் கிழவியை ஒரு தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு ஆர்கோஸ் நகருக்குப் போனபோது, ஹீரா தேவதை அவர்களைப் பார்த்து, என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள். எந்த வரமும் வேண்டாம் என்றார்கள்- அந்த இருவரும். அப்போது அவர்களது தாயாரான வயதான் மூதாட்டி, தேவதையிடம், ‘இவர்களுக்கு நல்லகதியைக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டாள்.

பெற்றோருக்குத் தொண்டு செய்து கொண்டே இறந்துவிட்ட அந்த இருவர்கள்தான் மகிழ்ச்சியின் இரண்டாவது இடத்திலே இருப்பவர்கள் என்றார். சோலான்!

கடைசியாகக் கேட்ட குரோசஸ், ‘எனது சொந்த மகிழ்ச்சியைப் பற்றி உங்களது முடிவு என்ன?’ என்றார். அதற்கு, சோலான், “எவன் ஒருவன் கடைசிவரை மகிழ்ச்சியுடன் இருக்கின்றானோ, அவன்தான் கொடுத்து வைத்தவன். அப்படி இல்லாதவன், அதிருஷ்டக்காரன் ஆவானே தவிர, மகிழ்ச்சி உடையவனாக இருக்கமாட்டான்.” என்றார்.

எவன் ஒருவன் தனது வாழ்நாள் முடிவு வரை அமைதியுடன் வாழ்ந்து சாகின்றானோ, அவன் தான் சிறந்த மகிழ்ச்சியாளன் ஆவான் என்றும் கோலான் சொல்லி முடித்தார் பிறக சார்டிஸ் நகரத்தை விட்டுப் புறப்பட்டு விட்டார்.

சோலான் புறப்பட்ட அன்று குரோசல் ஒரு கெட்ட கனவைக் கண்டார். அதாவது, அவனுடைய மகன் ஒரு பன்றியின் படிம உருவத்தால் சாவான் என்பதே அந்தக் கனவு! அதன் படி அந்த சிறுவன் மாண்டான்!

இவ்வாறு சட்டஞானி சோலனுக்கும், மன்னன் குரோசசுக்கும் இடையே நடை பெற்ற மேற்கண்ட உரையாடல் இலக்கிய