பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாத்தா உஞ்சோலி மயிரப்பாரு... சங்கிலி மகன் அருவா வேலு தான் நானு. வம்பு வந்தாபெறகு பாரு... தாத்தா...' என்று தலையை சாய்த்து ஆட்டினான். போடு சக்கே... பெரிய்ய கொம்பன் பாரு... இந்த வயசிலயே... இப்பிடி மொளச்சிருக்க... வம்பா சீரழியப்போர பாரு.... அவன் காதைப் பிடித்துத் திருகினார் சாவன்னா. வேல்தேவன் விழுந்து விழுந்து சிரித்தான். தாத்தா உங்கோளாறு... தெரியாதுண்ணு பாத்தியா... நான்சாமி நாயக்கரு பேரனாக்கும்... சாவன்னா அவனைத் தலையோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். வேலு இடுப்பில் அருவாள் பளபளத்தது. 'அட வேலுத்தேவா மாடு என்னடா சொல்லுது... அந்தா பாருடா. வடக்குத்திமாடுகள் எவ்வளவு சைசா, தலைய ஆட்டுது. காலில் கயிறு விழுந்தா தலையக்குனிஞ்சு. மெதுவா காலத்துக்கி ஆளைக்கூப்பிடுது பாரு....' ரெண்டு பேரும் ஒத்தை மாட்டை பிடித்துக்கொண்டு வந்தார்கள். சரியான போர்க்காளை. - 'ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ, நம்ம பெழப்பு நாறிக்கிடந்தாலும் மாடு வச்சு பிழைக்காதவன் என்னடா சமுசாரி, வேலு மாடுமாதிரி தலையை உருட்டினான். 'மாடுகளோட பந்தம் வேணும். பேச்சுத் துணைக்கு மாடு இல்லாட்டி மண்ணுல போயி முட்டவேண்டியதான் என்ன நாஞ்சொல்ரது." "சரிசரி.... நீ சொன்னா மெதமாவா இருக்கும்... வேலு நமட்டுச் சிரிப்புடன் மாட்டுக்குப் பின்னால் நடந்தான். பக்கத்து ஊர்களில் தண்ணி வாங்கி குடித்தார்கள். அந்த ஊர் சம்சாரி முகத்தில் அருள் அத்துப் போய்க்கிடந்தான். - 'ஊருக்குள்ள சாராயம் கிடைக்குமா...' என்று சாடைமாடையாகக் கேட்டான் வேலு. "எலே தடிப்பிலே... உன் அருவாள்தான் பதம்னு பாத்தியா. சும்மா இருக்க மாட்ட மொளங்கைய ஒடிக்கப்போரன்பாரு... உன்ன. அவனே சாவாரச் செத்துகெடக்கான்... எடக்கு பண்ணுரயாடா...' 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/18&oldid=463922" இலிருந்து மீள்விக்கப்பட்டது