பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூக்கம் கந்தர்வன் கண்கள் இரண்டையும் உயர்த்தி உத்தரத்தையே வெகு நேரம் பார்த்தான். அம்மா சின்ன வயசில் சொல்லிக் கொடுத்தது இது. 'தூக்கம் வரவில்லையென்றால் மல்லாக்கப் படுத்து இருட்டில் உத்தரத்தை வெகு நேரம் குறு குறுவென்று பார்க்க வேண்டும்; ஒன்றையும் நினைக்கக் கூடாது. பார்க்கப் பார்க்கக் கண்ணுக்கு அயர்வு வந்து துக்கம் சுற்றும். ஒரு காலம் வரை இது பலித்தி ருக்கிறது. இப்போது அதுவும் பலிப்பதில்லை. உத்தரத்தைக் குறுகுறுவென்று பார்க்கையில் சாட்டை சாட்டையாய்த் தொங்கும் நூலாம்படை தெரிகிறது. அடித்துச் சுத்தப்படுத்த நேரமில்லை. அதைத் தொட்டு ஒவ்வொன்றாய் நினைப்பு எங்கெங்கோ போகிறது. 'நினைப்பையெல்லாம் ஓர்மைப்படுத்தி ஒண்ணு ரெண்டு மூணு என்று பத்து வரை மனசுக்குள் சொல்லிக் கொண்டே போய் மறுபடி ஒண்ணு ரெண்டு மூணு என்று பத்துவரை வந்து இப்படியே பல தடவை சொல்லத் தூக்கம் வரும்' என்று இன்னொரு மருந்தையும் அம்மா சொல்லியிருந்தது. ஒண்ணு ரெண்டு மூணு என்று ஆரம்பித்து நாலு வருவதற்குள் மனசு எங்கேயோ சம்பந்தமில்லாத இடத்திற்கு ஒடுகிறது. - மாதத்தில் இரண்டு மூன்று தடவையாவது இப்படி ராத்துக்கம் நின்று போகிறது. பதினோரு மணிக்குள் தூங்கினால் தான் உண்டு. அதற்கப்புறமும் புரண்டு கொண்டிருந்தால் அந்த ராத்திரி சிவராத்திரி தான். சுவரடியில் கடிகாரத்தைப் பார்த்தான். ரேடிய வெளிச்சத்தில் பனிரெண்டாகிக் கொண்டிருந்தது. தூக்கம் வரவில்லையென்ற கவலை பாதி தூக்கத்தையே வராமலாக்கி விடுகிறது. 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/70&oldid=463976" இலிருந்து மீள்விக்கப்பட்டது