பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாதி. 0997 குருமலை கோவாப் ரேட்டிவ் சொசைட்டிகாரியதரிசி ஆனந்தகிருஷ்ணன். பிரதிவாதிகள்: (1) குருமலையில் இருக்கும் ராமசாமி நாயக்கர் குமாரர் சாமிநாயக்கர். (2) குருமலையில் இருக்கும் கருப்பையா ஆசாரி குமாரர் செல்லையா ஆசாரி தாவா நெம்பர் 303/1984-85 குற்றச்சாட்டுகள்: 1956 வது வருஷம் விஜய வருஷம் புரட்டாசி பட்டத்து விதைப்புக்கு மானாவாரிப்பருத்தி சாகுபடிக்கு வாங்கிய கடன் ரூபாய் நூற்று ஐம்பது. மேல்படி பிரதிவாதிகள் (2) செல்லையா ஆசாரி ஜாமீன் போட்டு எழுதிக் கொடுத்த வெற்றிலைக்கடன் பத்திரத்தில் சாமிநாயக்கர் பேரில் உள்ள பாக்கித்துகை ரூபாய் 907-03ந.பை. இந்ததுகை தண்டவட்டி நோட்டீஸ் சார்ஜ் உள்பட சொத்து விபரம் வில்லங்கம். பிரதி வாதிகள்: (1) சாமிநாயக்கருக்கு இருந்த மானாவாரிக் கரிசல் பனிரண்டு ஏக்கர் தோட்டம் பொய்த்த கிணறு சேர்ந்து ஒரு ஏக்கர் ஐம்பது செண்டு. மேல்படி நில விஸ்தீரணத்தின் பேரில் முன் கடன் நிலுவை இருந்தும் பனிரெண்டு ஏக்கர் நயம் கரிசல் கிரயம். நாளது பசலி 88க்கு நிலம் ஒரு ஏக்கர் ஐம்பது செண்டு. வறண்ட தோட்டம். நாளது தேதியில் தரிசு. அசையாச் சொத்தாக உள்ளன. தபசில் சொத்து விபரம்சரி. பிரதிவாதிகள்: (2) செல்லையா ஆசாரிக்கு நிலம் இல்லை. குருமலையில் வடக்குத்தெருவில் தெற்கே பார்த்த தட்டி அடைத்த ஒட்டடுக்கு வீடு rண தசையில் உள்ளது. வீட்டின் பேரில் அடமானம், தெற்குத் தெரு கிருஷ்ணஞ்செட்டியாருக்கு ரூபாய் ஐம்பதுக்கு வீட்டு மனை உள்ளது. தபசில் சொத்து விபரம் சரி. 1 வது பிரதிவாதி சாமிநாயக்கர் வேகாரியாய் அலைந்து திரிவதாய் ரிப்போர்ட். கோர்ட் மூலம் ஆள் அனுப்பி சம்மன் கொடுக்க முயற்சித்தபோது சாமிநாயக்கர் சம்மனை வாங்கிக் கிழித்துப் போட்டுக் கோர்ட்டை அவமதித்துள்ளார். f r 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/24&oldid=463928" இலிருந்து மீள்விக்கப்பட்டது