பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருக்கிறேன். 23-1-1862 ஆம் நாளாகிய இன்று, எதிர்பாராத ஒர்எச்சரிக்கை எனக்குக் கிட்டியது. பறந்து செல்லும் பைத்தியச் சிறகு வீச்சின்காற்று, என் மீது படிந்து சென்றதை நான் உணர்ந்தேன் என்று குறிப்பிடுகிறார். - தன் பெயரைக் கூட நினைவு கூர முடியாத நிலையிலும், நிலைக் கண்ணாடியில் தன் சொந்த முகத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியாத நிலையிலும், புறக்கணிப்புக்கு ஆளாகி, ஆதரவற்றுத் தமது கடைசி நாட்களைப் பாரிசில் கழித்தார். மிகச் சிறந்த கவிஞரான போதலேரைப் புகழ் பெற்ற பிரெஞ்சு இலக்கியக் கழகம் (French Acadamy) உறுப்பினராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. அந்த வேதனையைத் தாளாத அவர், பாரிசை விட்டு நீங்கி பெல்ஜியத்தில் சொற்பொழிவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அலைச்சல் அவர் உடல் நிலையை மிகவும் பாதித்தது; 1867 இல் பாரிஸ் மருத்துவமனையொன்றில் உயிர்துறந்தார். தாம் செய்யும் எந்தப் பணியையும், செப்பமாகவும், திருத்த மாகவும் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர் போதலேர், நிறைய எழுதுவதை அவர் விரும்பவில்லை. ஒன்று செய்தாலும், ஒப்பற்றதாக இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். நச்சுப் பூக்களை 1850 இல் தொடங்கினார். அதன் குறைகளைக் களைந்து, பத்தாண்டுகள் திருத்தம் செய்து, மேன் மேலும் அழகு படுத்தினார். 1861 இல் அதன் இறுதி வடிவம் உருப்பெற்றது. - போதலேரின் படைப்புக்கள் பற்றி ஆர்தர் சைமன்ஸ் என்ற திறனாய்வாளர், தாம் எழுதியுள்ள இலக்கியத்தில் குறியீட்டு Quéâlh'(The symbolist movement in literature) arcărp sta's losis வருமாறு குறிப்பிடுகிறார்: 'ஒரே ஒரு கவிதை நூலை எழுதுவதில் போதலேர் தமது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டார்; அதன் பிறகுதான் பிரெஞ்சு மொழியில் உயர்ந்த கவிதைகள் எல்லாம் தோற்றமெடுத்தன. ஒர் உரைநடை நூல் எழுதினார்; அந்த உரைநடை அழகுக் கலையாக (Fine Art) மதிக்கப்படுகிறது. - ஒரு திறனாய்வு எழுதினார்; அவர் வாழ்ந்த காலத்தில் தோன்றிய திறனாய்வு நூல்களில் இதுவே உயர்ந்ததும், உண்மையானதும், நுட்பம் மிக்கதும் ஆகும். - HÚ{