பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெவ்வேறு விதமான ஓசைகளை உண்டாக்குவது, அதன் மூலம் சில கருத்துக்களை குறிப்பாக (சஜ்ஜஸ்டிவாக) சொல்வது என்று புதுக்கவிதை இயக்கம் உருவாகிறது. - இது ஜெர்மனியில் பரவிய பிறகுதான் இங்கிலாந்துக்கு மிகவும் காலந் தாழ்த்தி வருகிறது. இதுதான் புதுக்கவிதையின் துறை. வால்ட் விட்மன் எழுதியது வசன கவிதை. அதனுடைய பாதிப்பு புதுக்கவிதை இலக்கியத்தில் ஏற்படவில்லை. அது வால்ட் விட்மனுடனேயே நிற்கிறது. அது தவறான எடுத்துக்காட்டு என்றே டி.எஸ்.எலியட் கூறுகிறார். புதிய பாணி. ஆனால் வசன கவிதை, வசனம்தான். வெறும் வசனம்தான். ஃபிரீவெர்ஸ். ஃபிரீவெர்ஸ், நியூவெர்ஸ் என்று அப்போதே இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள். ஷேக்ஸ்பியர் எழுதுவது பிளேங் வெர்ஸ். அவருடைய கவிதைகளில் சந்தம் இருக்கும். ஆனால் எதுகை மோனை இருக்காது. t ஃபிரீவெர்ஸ் என்பது வசன கவிதை. இதில் சந்தமும் இருக்காது. நியூவெர்ஸ் என்பது தான் புதுக்கவிதை. இதில் சந்தம் இருக்கும். ஆனால் இந்த சந்தம் பலவகையான நுட்பங்களைக் கொண்டது. ஒர் உதாரணம் சொல்கிறேன். உரையாடல் சந்தம் என்பது (ஸ்பீச்ரிதும்) எப்படி புதுக்கவிதையின் வரிகளைப்பிரிப்பது என்பது இதில் அடங்கும். எப்படி வரி பிரிப்பது. சும்மா வரியைப் பிரித்துப் போட்டு விடுவதா? இல்லை. - $ பேசும்போது சில சொற்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பேசுகிறோம். சில இடத்தில் நிறுத்துகிறோம். சில இடத்தில் மீண்டும் சொல்கி றோம். குரல் ஏற்ற இறக்கம் காட்டுகிறோம். இதுதான் உணர்ச்சியை உண்டாக்குகிறது. 136