பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாருடா சுடுகாடு நேரா இங்கேயிருந்து எடுத்துக்கிட்டுப்போயி கொளுத்திப்புட்டுப் போகலாம் வாடா! சின்னான்:- மாமா! என்ன சொல்lங்க? அப்பிடி செஞ்சுப்பிட்டா ஊர்லே என்ன மாமா சொல்லுவாங்க? அவுங்களுக்கு நாம் என்ன பதில் சொல்றது? . கருப்:- அடப்போடா ஊரும் இவனும் மனுசன் உயிரோடு இருந்தபோது காட்டின மரியாதைப் போதும் பெரிய்ய... சடங்கு... அது ஒண்ணுதான் பாக்கி இந்த சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம், காசு பணத்தோட, வசதியோட இருக்கறவுங்களுக்குத் தான்.... ஒன்னை, என்னை மாதிரி அன்னாடங் காச்சிகளுக்கு இல்லே நமக்கு வயித்துப் பொளப்பே பெரிய சடங்குதான். டேய் இவ்வளவு நேரம் இவங்கள்ளாம் என்னன்னமோ பேசினாங்களே ஒனக்கு ஏதாவது புரிஞ்சுதா? புரியாது! ஏன்னா நாம போக வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப இருக்கு நாமள்ளாம் வாயிருந்தும் ஊமைங்க! நம்பளோட பலவீனம்தான் இவுங்களோட பலம்.. (என்று கருப்பண்ணன் வார்டுபாயைச் சுட்டிக்காட்டுகிறான். வார்டுபாய் டாக்டரையும், டாக்டர் நர்ஸையும், நர்ஸ் அரசு ஊழியனையும், அரசு ஊழியன் வியாபாரியையும், வியாபாரி அரசியல்வாதியையும், கடைசியாக அரசியல்வாதி மக்களையும் சுட்டிக் காட்டுகிறான்) காட்சி முடிவு. . காட்சி, 9 (மேடையில் ஒளி. இளைஞன். மீண்டும் வேதாளம்) வேதாளம்:- ஏ மனிதா இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தினமும் நீ சந்தித்திருப்பாய்! இன்னமும் சந்திப்பாய். இதற்கெல்லாம் உன்னுடைய பதில் என்ன? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இதற்கெல்லாம் யார் காரணம் என்று உடனே நீ பதில் சொல்லா விட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்! இளைஞன்:- (சிறிது நேர யோசனைக்குப்பின்) இது மிகப் பெரிய பிரச்னை இது சமுதாயத்துல புரையோடிப்போன புண்! இவ்வளவுக்கும் காரணம் மக்களின் பொறுப்பற்ற தன்மை' அடுத்தவன் எப்படிப் போனால் என்ன, என்காரியம் எப்படியு 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/66&oldid=463972" இலிருந்து மீள்விக்கப்பட்டது