பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிதாக விடிந்திருந்த காலை. வாசல் படிகளை ஒட்டி ஒடும் சாக்கடை ஒட்டத்துடன் பருப்பு ரசம் கலந்த வெஞ்சனத்தின் மணம் தெரு மணத்து பசியைக் கிண்டியது. கீழ போடுரதுக்கு கையில குடுத்துட்டா என்ன. அநியாயமா கீழ கொட்டுராகளே. என்ன பொம்பளைக... விணப்பிறவிக. வயிற்றெரிச்சலுடன் கைத்தடி புலம்பியது. காலை வெளியில் வீட்டு உசரம் வேலிச் செடிகளைக் கண்டார். அடத்தாயளி.... நாட்டுக் கருவல் நம்மளை விடாதோ, வேலிச் செடி மறசலில் பன்றிகளின் உறுமல். தண்டவாளங்கள் வடக்கும் தெற்குமாக நீட்டிக்கிடந்தது. பனியில் நனைந்த தண்டவாளங்களைத் தாண்டி சாமிநாயக்கர்போய்க் கொண்டிருந்தார். . சூரியனின் படுக்கைவசக் கதிர்கள் கண்களைக் கூசின. தண்டவாளங்கள் நெடுகில் ஆட்கள் உட்கார்ந்து பன்றிகளை விரட்டினார்கள். பன்றிகள் உறுமின. ஊசி மூஞ்சியை நீட்டிக் கொண்டிருந்தன பன்றிகள். தண்டவாளங்களைக் கடந்து தெட்சிணாமூர்த்தித் தெருவுக்குள் சைக்கிள்களும் தீப்பெட்டி ஆபீஸ் கும்பலும் நகர்ந்தது. சாமிநாயக்கரின் கைத்தடி கவாத்து கவாத்தென்று சத்தம் உண்டாகியபடி கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்தது. ரயிலில் அடிபட்டுக் கிடந்த யாரோ அனாதைப் பிணத்தைப் பார்த்து சாமிநாயக்கர்தான் என்று முடிவானது. உக்கிரமான நடுமதிய வேளை, உடைந்து கூழாகிப்போன சாமிநாயக்கருக்காக, தெட்சிணா மூர்த்தித் தெருக்காரர்களும் தண்டவாளங்களுக்கு அந்தப்பக்கம் பிரிந்து கிடந்த காந்தி நகர் வாசிகளும் துக்கப்பட்டார்கள். தண்டவாளங்களுக்கு அருகில் சாமிநாயக்கரைப்போல் அனாதையாக விடப்பட்ட அவரது அருமை நண்பன் கைத்தடி இடுப்பு ஒடிந்து கிடந்தது. கைத்தடியைப் பார்த்ததும் சாமிநாயக்கர் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் டீக்கடை வெங்கிடு. உடனே டீக்கடை வெங்கிடு சார்பில் சாமிநாயக்கரின் பூத உடலுக்கு கோடித்துணி போர்த்தப்பட்டது. வெங்கிடு டீக்கடையில் இரங்கல் கூட்டம். சாமிநாயக்கரைப்பற்றி அறியாதவர்கள் சாமிநாயக்கரின் பெருமைகளை டிக்குடித்தபடி பேசிக்கொண்டிருந் தாாகள. 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/33&oldid=839009" இலிருந்து மீள்விக்கப்பட்டது