பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞன் லாங்ஸ்டன் ஹியூஸ் என். கலைதாசன் வெள்ளை முதலாளியின் சொல்லொண்ணாக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவன் அமெரிக்க நீக்ரோ. அவன்பாடு பெரிது; பெற்ற கூலி சிறிது. எதிர்த்துப் பேசினால் சவுக்கடி இட்ட பணியிலிருந்து தப்பி ஒட முயற்சித்தால் சவுக்கடி வெள்ளையனுக்கு ஒதுங்காமல் வீதியில் நடந்தால் சவுக்கடி. இந்த அநீதியை, அக்கிரமத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க அன்றைய நீக்ரோவுக்குத் துணிவில்லை. ஆனால் மாற்றானைப் போல் தானும் மனிதனாக வாழ வேண்டும், வெள்ளையனைப் போல் முதல்தரக் குடிமகனாக, சுதந்திரக் குடிமகனாக, அமெரிக்க மண்ணில் நடமாடவேண்டும் என்ற உள்ளுணர்வு அவனிடம் ஓங்கியிருந்தது. நீக்ரோ மக்களின் இந்த உணர்வுக்கு உருக்கொடுத்து அதை வெளிப்படுத்திய பெருமை கார்வே, புக்கர் டி. வாஷிங்டன், டுபாஸ் போன்ற நீக்ரோ அறிஞர்களைச் சாரும். அந்த வரிசையில் இடம்பெற்றவன் லாங்ஸ்டன் ஹியூஸ். அமெரிக்க இலக்கிய வானில் சுடர்விட்டு எரியும் விண்மீன் லாங்ஸ்டன் ஹியூஸ் , நீக்ரோக்களின் கலாச்சாரத்தை உருவாக்கிய பேரறிஞன். தன் கவிதையால், கதையால் அமெரிக்க நீக்ரோக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளுகின்ற துயரங்களை ஆவேசத்தோடு எழுதினான். சிந்துகின்ற இரத்தத்தில், வியர்வையில் நீக்ரோ மக்கள் வாழ்க்கை கரைந்து கொண்டிருக்கின்ற இழிவை, நீக்ரோமக்களின் இதயத்துடிப்பைப் படம் பிடித்துக் காட்டினான். ஹார்லெம் - இது அமெரிக்காவில் கருப்பர்களின் குடியிருப்பு. நீக்ரோக்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புண்ணியபூமி. இங்கு நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலவு போல அவதரித்த லாங்ஸ்டன் ஹியூஸ், அடிமைத்தளையால் கட்டுண்டு வீழ்ந்து கிடந்த அமெரிக்க H42