பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானுறங்கு மூச னல்ல விளக்காக வெனைத்திரியா விடியுமட்டு மெரித்தனையே வெண்ணிலாவே" என்று விரகதாபத்தால் வெண்ணிலாவைச் சாடும் நாயகியரின் காவிய நாயகனாக வர்ணிக்கப்பட்ட செவந்தெழுந்தான் அவ்வூர் வழியே வேட்டைக்குச் சென்றார். பிற ஆடவரைப் பார்க்க அனுமதிக்கப் படாதிருந்த அப்பெண்கள் அழகிய மன்னரை ஆவலோடு பார்த்ததால் தம் குலத்திற்கு இழுக்கு நேர்ந்து விட்டது எனக்கருதி நம்புகுழி செட்டிகுல ஆடவர் அனைவரும் தம் பெண்டிரை நெருப்புக் குழியில் தள்ளிவிட்டு தாங்கள் நம்பு குழியை விட்டே போய்விட்டனர் என்று 'புதுக்கோட்டை இராஜ்ஜியச் சரித்திரம் தெரிவிக்கிறது. - இந்தச் செவந்தெழுந்த பல்லவராயர் தன்னுடைய சொந்தப்பகுதி யைத் தவிர, கிழவன் சேதுபதி (1974-1710) யின் பிரதிநிதியாக அப்போது சேது நாட்டைச் சேர்ந்திருந்த கீழாநிலை, திருமெய்யம் ஆகியவற்றையும் ஆண்டுவந்தார். > புதுக்கோட்டையிலிருந்து பல்லவராயர் ஆளுகின்ற காலத்தில் தொண்டைமண்டலத்திலிருந்து கரம்பக்குடியில் வந்து தங்கிய ஒரு கள்ளர் பிரிவு 1650-இல் இருந்து சிறு பகுதியை ஆண்டு வந்தது. பல்லவராயர் கை ஓங்கியிருந்தமட்டும் இவர்களின் பெயர் வெளி உலகுக்குத் தெரியவில்லை. இவர்களின் புகழ் பாடுவது, 1750-இல் வெங்கண்ணா எனும் தெலுங்குக் கவிஞர் எழுதிய 'தொண்டைமான் வம்சாவளி. வரலாற்று அடிப்படையில் அறியப்படும் இந்தப் பிரிவின் முதன் அரசன் ரகுநாத ராயத்தொண்டமான். இந்த இராயத் தொண்டமானும் அவர் தம்பி நமனத் தொண்ட மானும் கிழவன் சேதுபதிக்குப் படை நடத்தி உதவி புரிந்து அவன் அன்பைப் பெற்றிருந்தனர். வேட்டைக்கு வந்த காலத்தில் தொண்ட மானின் தங்கையைக் கண்டு காதல் கொண்ட சேதுபதி அவளை மண முடித்தார் தொண்டமான் மைத்துனரானதன் மூலம் சேதுபதிக்கு இன்னும் நெருக்கமாகி விட்டார். இந்நிலையில், செவந்தெழுந்த பல்லவராயரின் அரசியல் போக்கில் மாறுதல் ஏற்பட்டு வருவதாக வும் அவர் தஞ்சை அரசர் பக்கம் சாய்வதாகவும் சேதுபதி செவிகளுக்கு ஒரு செய்தி எட்டிற்று. அரசியல் குறித்து ஆலோசனை நடத்தத் தம்மை காளையார்கோயிலில் வந்து சந்திக்குமாறு சேதுபதி யிடமிருந்து செவந்தெழுந்த பல்லவராயருக்கு ஒலை பறந்தது. I15