பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டியாகவும் இருந்தன. சூரியன் சுட்ட பழம்பாறைகளைப் போல நிழல்களைப் பிரதிபலித்தவாறு நெருக்கமாய், மெளனமாய் நாம் அமர்ந்த போது, சூரியன் அகன்றான். வானத்தில் காலத்தின் பயணத்தைக் கண்டு கொண்டிருந்தோம். நீ - நீதான் என்பதும் நான் - நான்தான் என்பதும் மறந்து ஒரு திருப்தியில் நான் கண்ணயர்ந்த போது முன்னர் ஒரு பொழுதும் காதலில் வீழாத எனது உதடுகளில் காற்றுப் போலும் மென்மையான உனது முத்தம் இருந்தது. உன்னைக் காதலித்தாக வேண்டிய வழிகள் எனது விழிகளின் பின்னால் உருப்பெற்றன. விதையிலிருந்து ஆசையின் சுகந்த நந்தவனமாய் அவை வளருவதைக் கண்டேன் நான். பிறகு, - மெத்தென்ற உனது விரல்கள் எனது சதைக்குள் காதலை விதைத்தது ஏதோ - நான் மண்ணால் ஆக்கப்பட்டது போல, அங்கே நீ ஒரு அன்பான உழவனைப் போல அமைதியான, வலிய, உனது பழுப்புநிறக் கைகள் நமது வாய்கள் சம்பாதித்த லாபத்தை காரியப்படுத்த புதிய வழிகளை அறிந்திருந்தன. எனது ரத்தத்திற்குப் பாடுவதற்குக் கற்பித்தாய் நீ. உனது ஸ்பரிசத்திற்கு அடியிலே எனது தோல் சும்மாயிருந்தது. இடையே இருந்த துன்பம்தரும் போர்வை கரடுமுரடான தனது பிடிமானத்தை உதறிவிட்டு, என்னை விடுதலை செய்தது. தேம்பும் இன்பத்தில் என்னைப் பிடித்தாய் நீ பிறகு, சிரித்தோம், குதித்தோம். ஒண்டி விளையாடினாய் நீ. நான் பெண்ணாயிருந்தேன். நீ ஆணாயிருந்தாய். நமது காதலின் முழுமையான I30