பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் இனத்தவர் மீது வெள்ளையன் அதிகாரம் செலுத்துவதை அடியோடு வெறுத்தான். வெள்ளையன் மீது தனக்குள்ள வெறுப்பை வெளிப்படையாக எழுதினான். நிறத்தின் காரணமாக திரைப்பட அரங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவள் பட்ட தொல்லையும், துயரமும் இனவெறிக் கோட்பாட்டைச் சுட்டெரிக்கும் எரிமலையாக வெடித்தது. - நான் ஒரு நீக்ரோ. காரிருளின் கருமை நிறம் படைத்தவன் காரிருள் கண்டமாம் ஆப்ரிக்கா நிறத்தினன். நான் ஒரு அடிமை. சீசரின் வீட்டு வாயிலைச் சுத்தம் செய்கின்றேன். செல்வக் கோமான் வாஷிங்டனின் காலனியைத் துடைக்கிறேன். நான் ஒரு தொழிலாளி. பிரமிட் எழுந்தது என் கரத்தால் பிரமாண்டமான கட்டிடங்கள் எழுந்தது நான் சுமந்த சாந்துக் கலவையால். நான் ஒரு பாடகன். துயருற்ற என் இனத்தவர் துன்பத்தைத் துன்பியல் பாடலாகப் பாடினேன். நான் ஒரு பழிவாங்கப் பட்டவன். காங்கோகாரன் என் கரங்களை வெட்டிவிட்டான் பெல்ஜியக் காரன் என்னை மிச்சிகள் ஆற்றில் மூழ்கடிக்கச் செய்தான். உழைக்கும் வர்க்கமாம் கருப்பர் இனத்தைச் சுரண்டி வாழ்பவன் வெள்ளை முதலாளி. நீக்ரோ மனிதனாக நடத்தப் படுவதில்லை. மாட்டு மந்தையென நடத்தப் படுகின்றான். உழுது பயிரிட்டு உழைப்பவன் நீக்ரோ. ஆனால் அறுவடைக் காலத்தில் விளைச்சல் வெள்ளையன் கையில். - இதோ, ஒரு நீக்ரோக்கள் கூட்டம் மந்தையென வயலுக்குள் விரட்டப் படுகிறது 144