பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்:- வாடாராஜா இப்பிடி வந்து படுத்துக்க ஒங்கப்பன் இதோ வந்துடுவான் ஏதாவது வாங்கிட்டு வருவான். சிறுவன்:- போதாத்தா காலையிலேருந்து இப்பிடித்தான் ஏதாவது சொல்லி தண்ணியக் குடுத்தே தூங்க வைக்கறே! கருப்:- என்னடா செய்யறது? இன்னிக்காவது எப்பிடி யாவது வேலைபாத்துக் கூலி வாங்கிட்டு வரேன்னு போனான். காலையிலே போனவன இன்னுங் காணமே? சிறுவன்:- வெளியில போயி அப்பா வருதான்னு நான் பாக்கட்டுமா? - கருப்:- வேணாம்டா வெளிலே ஒரே இருட்டு, மழை வேற பேயுது. இங்கே வந்து படுத்துக்கடா (கருப்பண்ணன் கூப்பிடுவதைக் கவனிக்காமல் சிறுவன் வெளியில் போகிறான். அதற்குள் இன்னொரு சிறுவன் விழித்துக் கொண்டு பசிக்கிறது என்கிறான்.) கருப்:- அடக்கடவுளே! இது என்ன சோதனை? இன்னும் எத்தனை நாளைக்கி இப்பிடிப் பசிபட்டினின்னு அவதிப் படறது? பாழாப்போன மழை இன்னும் விட்டபாடில்லை. மவராசிங்க! அம்மாவும், மகளுமா, இதுங்கள எங்க கால்லே கட்டிப்புட்டு நிம்மதியாப் போய்ச் சேந்துட்டாளுங்க. காலையில போன சின்னான் இன்னுங் காணமே!... (இளைஞன் வயிற்று வலியால் துடிக்கிறான்) போதாக் கொறைக்கி இந்த நோக்காட்டுப் புள்ளை வேறே! இளைஞன்:- தாத்தா வலி உயிர் போகுது... தாங்க முடியல்லி யே! அப்பா இன்னும் வரல்லியா? சின்னவன் முத்து இருட்டுல எங்கியாவது போயிடப் போறான்!... அவனைக் கொஞ்சம் கூப்புடுங்க தாத்தா...! கருப்:- எலேய் முத்து...! முத்து....! எங்கடா போனே? இதைத் தேடவாவது ஒடம்புல தெம்பு இருக்கா? டேய் முத்து ஒங்கப்பன் வர்ரப்போ வரட்டும் உள்ளற வாடா? (முத்து அழுதுகொண்டே கையில் இலையுடன் வருகிறான். பின்னால் சின்னான் வருகிறான்.) சின்னான்:- ஏம்மாமாதுரங்கிட்டீங்களா? இவன வெளியிலே வுட்டுப் போட்டு உள்ளற என்ன செய்யlங்க? 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/41&oldid=463946" இலிருந்து மீள்விக்கப்பட்டது