பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமுத்தாய் கிராப் தலையோடு திரிந்த காலத்திலிருந்து தலை சீவினது, பவுடர் போட்டு விட்டது... எல்லாம் சீதைதான். பல் தேய்க்கறதுக்கு, பாவாடை மாத்தறதுக்கு, சாந்துப்பொட்டு வைக்கறதுக்கு எல்லாம் சொல்லிக் குடுத்தது சீதைதான். சுருக்கமாகச் சொன்னால் ராமுத்தாயிக்கு விபரம் தெரிஞ்சதிலிருந்து அவளுக்கு அம்மாவாய்.... குருவாய், உயிர்த்தோழியாய், இருந்தது எல்லாம் அக்காள்தான். அந்த அக்காவை ராமுத்தாய் எப்படி மறப்பாள். அவளப் பிரிஞ்சு மூணு மாதம் ஆச்சு. தினமும் அக்காவை நினைத்து நினைத்து ராமுத்தாய் அழுவாள். ராத்திரியிலே தூக்கம் வராது. அழுதுகிட்டே படுத்திருப்பாள். தூக்கத்திலே, அக்காள் பக்கத்திலே ஒக்காந்துக்கிட்டு தீப்பெட்டி ஆபீஸ் பஸ்லே வீடு திரும்பற மாதிரி., பாயிலே பக்கத்திலே படுத்துக்கிட்டு இருட்டிலே ரெண்டுபேரும் பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி..., முதலாளி கெணத்து பம்பு செட்டிலே துணிகளை துவைத்து குளிக்கிற மாதிரி..., கன்னத்திலே குழிவிழ அக்காள் சிரிக்கிற மாதிரி... கனவு கனவாய் வரும். ★ அன்று சனிக்கிழமை, போட்ட சம்பளத்தை வாங்கி சேவு, கருப்பட்டிப் பலகாரம், ரெண்டு அழகான ரிப்பன் வாங்கிக் கொண்டு ராமுத்தாய் சீதை ஊருக்குப் போனாள். - அக்காவும் மச்சானும் வீட்டில் இல்லை. மாமா மட்டும் வயிற்றுக் கடுப்போடு எலும்புத் தோலுமாக முடக்கிக் கிடந்தார். ராமுத்தாயை விசாரிச்சு தெரிந்து கொண்ட போது சந்தோஷத்திலும் துக்கத்திலும் கண் கலங்கினார். 'மழை தண்ணி இல்லாததாலே ரெண்டு பிள்ளைகளுக்கும் வேலை இல்லை" அவருடைய குரல் கிணத்துக்குள்ளே இருந்து பேசற மாதிரி இருந்தது. 'வேலி வெறகு வெட்டிக் கஞ்சி குடிச்சிக்கிட்டு எனக்கும் ஊத்துதுக... அவர் சொல்லி வரும் போதே கண்ணிர் ஒழுகியது. "சீல் துருக்கு போயிருக்குதுக... வர்ற நேரம்தான்"ன்னு சொல்லிக்கிட்டே கிளம்பினார். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கடைக்குப் போய் கலர் வாங்கி வந்து குடிக்கக் கொடுத்தார். 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/83&oldid=463989" இலிருந்து மீள்விக்கப்பட்டது