பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தே தீர வேண்டுமென்ற சுயநலம்! மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சொன்னான்- - திட்டம்போட்டுத் திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.அதைச் சட்டம் போட்டுத் தடுக்கற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது! திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! சட்டம், ஒழுங்கு இதெல்லாம் மக்களை நெறிப்படுத்த ஒரளவுக்குத்தான் உதவும். ஆனால் மக்களுக்குப் பொறுப் புணர்ச்சியும், கொடுமைகளை எதிர்த்துக் குமுறும் நெஞ்சமும் இல்லாமல் போனால் எதுவும் செய்யமுடியாது. பாதகம் செய்வோரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! -என்றானே மகாகவிபாரதி. இன்றைய சமுதாயக் கொடுமைகளையும், அநீதிகளையும் கண்டு காறி உமிழவேண்டுமென்று ஒவ்வொருவரும் உமிழ ஆரம்பித்தால் இன்று சுற்றியிருக்கும் உப்புக்கடல்களைவிட உமிழ்நீர்க்குளங்களே நிரம்பி வழியும். மக்களுக்கு என்று பொறுப்புணர்ச்சிவரும்! அவர்கள் என்று சிந்திக்கத் தொடங்குவார்கள், சமுதாயக் கொடுமைகளைக்கண்டு கொதித்தெழுவார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல, எங்களைப் படைத்த கடவுளுக்கே தெரியாது! - (வேதாளம் மவுனமாக இருக்கிறது. பின்னர் மரத்தை நோக்கிப் போகிறது) இளைஞன்:- நில்! எங்கே போகிறாய்? - வேதாளம்:- மரத்துக்கு அதுதானே என்னோட இடம்! நீ சரியான பதிலைச் சொல்லிவிட்டாய்! உன்னோட புத்திக் கூர்மையைப் பாராட்டறேன். இளைஞன்:- உன்னோட பாராட்டு யாருக்கு வேணும்! என்னமோ சத்தியம் தவறாத வேதாளம்னு சத்தியம் பண்ணினே! 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/67&oldid=463973" இலிருந்து மீள்விக்கப்பட்டது