பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலுத்தேவன் சக்கிலியக் குடியை சுத்தி சுத்தி வருகிறான். நம்ம ஈசுவரியா.... பொண்ணு என்னமா.... அரச்ச மஞ்சளா இருக்கு... அம்மா... தாய்மாருகளா.... நல்லா குலவை போடுங்க... என்று வேலுத்தேவன் சாடையாய் சிரிக்கிறான். கூட்டம் குலவை போட்டு ஆராத்தி எடுக்கிறது. அருவா வேலு கொட்டுக்குத் தக்கபடி தாளம் போட்டு நடந்து போகிறான். அடேய் வேலுப்பயலே.... அங்க என்னலே... சோலி... கிறுக்குப்பய மாதிரி.... ஊட கூடி நொளையிரே, பொம்பளைக இருக்குற எடத்தில் உனக்கென்னடா வந்தது. வாடா இங்க... சாவன்னா ஆலமரத்தடியில் நின்று கூப்பிட்டார். வேலு வருகிறான் அருவாளை வீசிக்கொண்டு. 'மண்டக் கிருத்திரியம் புடிச்சபயலா இருக்கானே... நம்மபய..." என்று முனங்கியபடி சாவன்னா வாசிப்பை கேட்டுக் கொண்டிருந்தார். கொட்டுமேளம் உருண்டு உருண்டு காதுச்சவ்வு கிழிய அரட்டுகிறது. ஜனங்கள் கூடி நிற்கிறார்கள். - ‘நாயணம் வாசிப்பு என்ன மாதிரியா இருக்கு. ஆட்டக்காரஞ் சம்முகம் கூடுன ஆளா இருப்பான் போலருக்கு. அவன் புண்ணியமா மழை எரங்காதா....' என்று சாவன்னாகண் பட்டைக்கு மேல் கையை கூட்டி வைத்து மேகத்தைப் பார்த்தார். மேகம் மங்கலாய் இருந்தது. கண்பத்தலை. ரொம்ப நாள் பழகிய மேகங்கள். ஆலமரத்தை முட்டுவது போல இருக்கு. மோடங்கள் கீழ கொட்டிவிடுவது மாதிரி கூட்டம் கூட்டமாய் கர்ப்பமாய் இருக்கு. 'குருமலையில் மழை எறங்கிட்டது... பாரு... என்று சாவன்னா கூவினார். தடவுட தடவுட தடவுட என்று கொட்டுக்காரனின் சத்தத்துடன் இடி உருண்டது. வானத்துக்கும் தரைக்குமாக ஏங்கி ஏங்கி நாயணம் தவிக்கிறது. சண்முகம் எடுத்து ஊதுகிறான். மழை எறங்கு எறங்கு... எறங்கிரு... எறங்கிரு... என்று உருமியில் தேய்ப்பு விம்முகிறது. 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/20&oldid=463924" இலிருந்து மீள்விக்கப்பட்டது