பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடுக்கும்; வாங்கிட்டு ஒரு வீச்சுலே போய்ட்டு ஒடியாங்க" ன்னு அனுப்பி வைத்தாள். - ராத்திரி முழுவதும் மூணுபேரும் தூங்கவே இல்லை. விடிய விடிய பேசிக்கிட்டே இருந்தாங்க. காலையிலே ராமுத்தாயிக்கு எண்ணெய் தேய்ச்சு தலைவா அவள் வாங்கிட்டுவந்த ரிப்பன்லே ஒண்ணக்கட்டி பூ வைத்து விட்டாள் சீதை. அங்கே யாருடைய தோட்டத்திலோ கொய்யா போட்டிருக்காங்களாம். அங்கே இருந்து பத்து இருபது கொய்யாப் பழங்களை கோபால் வாங்கி வந்தான். * பழங்களை பையில் போட்டுக்கிட்டே, 'ஐயாவுக்கு என்மேல உள்ள கோபம் எப்பத்தான் தீருமோ'ன்னு சீதை பெருமூச்சு விட்டாள். புறப்படாமல் கூரை முகட்டைப்பார்த்துக்கிட்டே இருந்துட்டு பையை எடுக்கக் குனிந்தபொழுது "அவர்தலை குனியற மாதிரி நான் ஒண்ணுந் தப்பு செஞ்சுறலே'ன்னு வெடிச்சு வந்த வேதனையை அடக்கி குமுறிக்கிட்டே சீதை சொன்னாள். 'யக்கா நீ எப்பவுமே தப்பு செய்ய மாட்டேக்கா... ன்னு ராமுத்தாய் கட்டிப் பிடித்தாள். 'யக்கா உனக்கு நெனவிருக்கா. நீ சொன்ன விடைதான் ரைட்டு... நான் சொன்னது தப்பு:ன்னு இன்ஸ்பெக்டரே சொன்னாரே...' ரெண்டு பேரும் தழுவி அழுதுக்கிட்டிருந்தாங்க. 'சீதா கார் பத்தரை மணிக்கு... இத விட்டுட்டா சாயங்காலம் தான்' என்றான் கோபால். மூன்றுபேரும் கிளம்பினார்கள். வழிநெடுக தம்பி தங்கச்சிகளைப் பற்றி... அம்மா பற்றியே சீதை கேட்டுக் கொண்டு வந்தாள். ஒவ்வொருவர் நினைவிலேயும் கண் கலங்கினாள். காமாட்சியம்மன் கோவில் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கிருந்து சீதை திரும்பி விடவேண்டும். கோபால் ராமுத்தாயைக் கொண்டு போய் கார் ஏத்தி விட்டுட்டு திரும்பணும். * மூன்றுபேரும் தயங்கி நின்றார்கள். சீதை முந்தானைச் சேலையை எடுத்து கண்ணையும் முகத்தையும் துடைத்துக் கொண்டு ராமுத்தாயை ஆசையோடு பார்த்தாள். 'நாங்க ஒடக்கரை, கம்மாக் கரைன்னு அலைஞ்சு வேலி வெறகு வெட்டிப் பெழைச்சாலும் சந்தோஷமாத்தான் இருக்கோம்... எனக்கு அவுக ஒரு குறையும் வைக்கலை'ன்னு சொல்லி வரும்போது அவளுக்குக் குரல் 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/85&oldid=463991" இலிருந்து மீள்விக்கப்பட்டது