பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலுப்பயல் தெருவெல்லாம் ஒடித்திரிந்தான். அவன் தெரு முனையில் ஒடி வரும்போது தூரத்திலிருந்தே மணிச்சத்தம் கிணு கிணுக்கும். வீட்டுக்குள்ளிருந்து குதியாளம் போட்டு தெருவுக்கு வந்தார் சாமித் தாத்தா. நம்ம... பய வாராண்டோய்.... நம்ம கிடாவுக்கு சோடியுண்டா... இந்த ஊருள... ஆரு இருக்கா. கூடுன கிடா... நம்ம கிடாதான்.... பாரு.... சாமித்தாத்தாவைச் சுற்றிச் சுற்றி மணிச்சத்தம் கிணு கிணுத்தது. குருமலையில் குழிபறிக்கும் நரிகளால் கந்தல் கந்தலாய் வெட்டுப் பட்டு செத்துப்போன சங்கிலித்தேவன் மகன்.... தாத்தாவை சுத்தி சுத்தி ஓடிவருகிறான். . அடே... வேலுத்தேவா... நீதாண்டா... என் பேரன்... குருமலைக்குள் நரிகள் வாலை ஆட்டுது பாரு... நான் உனக்கு மம்பட்டி புடிக்கச் சொல்லித்தர மாட்டன்டா... பேரப்புள்ள...' தாத்தாவும் வேல்தேவனும் சிந்தி விட்டுப்போன சிரிப்பரவம் ஊர் முழுவதும் தீரவே தீராமல் கேட்டுக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் இழுந்தவராக சாமிநாயக்கர் வார்டு எண் 19-ல் பழுத்து வங்கு ஒடிய முகச்சுருக்கங்களுடன் மரச் சட்டத்தில் சாய்ந்து கொண்டிருந்தார். ஈரப்பெயிண்ட் அடித்தகம்பிகளுக்கு இடையில் முகத்தை ஒட்ட வைத்து இரும்புக்கம்பியின் குளிர்ச்சியை உணர்ந்தவராக வராண்டாவைப் பார்க்கிறார். வார்டுக்கு வெளியில் போன நூற்றாண்டுகளில் இருந்த கோட்டைச் சுவர்கள். கருப்பு படிந்த சுவர்களில் வெகு நாளைய வரிகள். வடக்குச் சுவர் ஒரங்களில் அரசுகள் இச்சி மரங்கள் தண்டு வளைந்த வேம்புகள். நடு மைதானத்தின் ஆலமரம். பறவைகள் தடம்பட்டது. எச்சம்பட்டு பழுத்த கிழடு. வங்கிழடு. தளர்ந்த அசைவில் சாமித்தாத்தாவைப் போல் மொடு மொடுத்து ஆடுகிறது. வரி வரியாக தடிப்பு. கீறல்கள். முதிர்ந்த கூனல் வளைவுகள். திணறும் பெருமூச்சுகள். மரத்தில் ஆணியை வைத்து தாறுமாறாகக் கோடுகள். இறந்து போனவர்களின் பேர் வெட்டப்பட்டிருக்கிறது. தண்டுகள் எல்லாம் மனிதர்கள் உண்டாக்கிய புண்களுடன் வாதையில் ஆழ்ந்திருக்கிறது ஆலமரம். . 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/30&oldid=463935" இலிருந்து மீள்விக்கப்பட்டது