பக்கம்:குக்கூ.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

சிறகிருந்தாலும்
செம்மறி முதுகில்
அமர்ந்து செல்லும்
சுகமே சுகமெனச்
சொல்லாமல் சொல்லும்
கரிச்சான் குருவி.


54

காவல் நிலையம் அருகில்
மலர்ந்த பூக்கள்
விற்கும் இந்தப்
பூக்காரிகளின்
முகங்களைச் செய்தது யார் சருகில்?

மீரா 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/50&oldid=1233077" இலிருந்து மீள்விக்கப்பட்டது