பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 4 (கருப்பண்ணன்சீட்டைவார்டுபாயிடம் கொடுக்கிறான்.) சின்னான்:- தம்பி..... இதக்கொஞ்சம் பாரு! என் மகனை அட்மிட் பண்ணனுமாம் எழுதிக் குடுத்திருக்காங்க! எங்ககூட்டிக் கிட்டுப் போகனும்னு சொல்லுப்பா! (வார்டுபாய் சீட்டைவாங்கிப் பார்த்துவிட்டுப் பொடியை உறிஞ்சிக்கொண்டே) வார்டுபாய்:- இப்ப நீ என்ன பண்றே! இங்கேயிருந்து நேர லெப்டுல போ! அங்கேயிருந்து ரைட்டுவ திரும்பினாகேஷ வாலிடி வார்டு வரும். அங்கேருந்து கொஞ்சதுரம் போயி பீச்சாங்கைப் பக்கம் திரும்பினா ஒரு மெடர்னிடிவார்டு வரும். அங்கேருந்து போனா ஒரு லாபர்ட்டி வரும். அங்கேயிருந்து ரைட்லே போயி, லெப்டுல திரும்பி, நேராப்போனா. இருப்பா எனக்கு மூச்சு வாங்குது... எங்க வுட்டேன்... லாபர்ட்ரிலேருந்து நேரேப் போனா சர்ஜிகல் வார்டு பக்கத்துல, அங்கே போயிவிசாரி.... (நர்ஸிடம் வருகிறார்கள்) கருப்:- ஏம்மா இவன அட்மிட்பண்ணனும். எங்கம்மா கூட்டிக்கிட்டு போகனும், ஆஸ்பத்திரி முழுக்க சுத்தியாச்சு. எங்கேன்னு தெரியல்லே! நர்ஸ்:- யோவ்! இது ஸ்பெஷல் வார்டுயா? ஒங்களை யெல்லாம் இங்க யாருய்யாவிட்டது? ஜெனரல்வார்டுக்குப் போய்யா அங்க வாரேன்... சோத்துக்கு வழியில்லேன்னா தர்ம ஆஸ்பத்திரிக்கி வந்து எங்க கழுத்த அறுக்க வேண்டியது. (மீண்டும்நர்லிடம் வருகிறார்கள்) நர்ஸ்:- (சீட்டை வாங்கிப்பார்த்துவிட்டு) புது அட்மிஷ னா? இருக்கற வியாதிக்காரங்களுக்குப் புரொவைட் பண்றதுக்கே எடத்தைக் காணம் இதுல புது அட்மிஷன் வேறே இங்கே பெட் ஒண்ணும் காலியில்லே இங்கே கீழேயே படுக்கவை வார்டுபாய். இந்த ஆளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணிபடுக்கவை.(போகிறாள்) 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/48&oldid=463954" இலிருந்து மீள்விக்கப்பட்டது