பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கோட்டைப் புரட்சியாளன் iரவெங்கண்ணன் மீ. மனோகரன் புதுக்கோட்டைத் தனியரசின் வரலாற்றை எழுதியுள்ள எந்த ஆசிரியரும் வீரப்பேராற்றல் மிக்க வெங்கண்ணன் தலைமையில் அரசுக்கு எதிராக ஏற்பட்ட எழுச்சியைப் பற்றி சிறிதளவாவது குறிப்பிடத் தவறுவதில்லை. அவ்வெழுச்சியை "வெங்கண்ணன் சேர்வைகாரர் கலகம்' என்று அவ்வரலாற்றாசிரியர்கள் குறித்துள்ளனர். அந்த எழுச்சி எப்போது ஏற்பட்டது? ஏற்படுவதற்குப் பின்னணி யான காரணங்கள் யாவை? யார் அந்த வெங்கண்ணன் சேர்வைகாரர்? அவர் முன்னோர் யார்? - என்றெல்லாம் வினாக்கள் எழத்தான் செய்யும். ஏனெனில் வெங்கண்ணன் சேர்வைகாரர் போன்ற வீரத் தலைவர்கள் மீது வரலாற்று வெளிச்சம் இதுவரை பாய்ச்சப் பட்டதில்லை. அதற்குக் காரணம், வட்டார வரலாறு பற்றி இன்றளவும் நம் நாட்டில் அக்கறை காட்டப்படாதது தான். - புதுக்கோட்டை வட்டார வரலாற்றினை அறிந்து கொண்டாலே வெங்கண்ணர் வெள்ளையர் படையை எதிர்த்துப் புரிந்த வெஞ்சமர் வெறும் கலகம் அல்ல; ஆட்சியாளருக்குக் கலக்கம் தந்த எழுச்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தொண்டைமான் நாடு என வழங்கிய புதுக்கோட்டைப் பகுதி, சோழ நாட்டில் ஒரு பகுதியும் பாண்டிய நாட்டில் ஒரு பகுதியுமாக அமையப் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஊடாக ஒடும் வெள்ளாறே சோழ பாண்டிய நாடுகளின் எல்லைக் கோடாக இருந்துள்ளது. - வெள்ளாற்றுக்கு வடக்கில் இருப்பது கோனாடு என்றும் தெற்கில் இருப்பது கானாடு என்றும் பெயர் வழங்கி வந்துள்ளது. கோனாட்டில் பிரான்மலை, பொன்னமராவதி, காரையூர், நெலிய II?