பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறும் கட்டுரையில் வரும் வசனம் இருக்கிறதே, அதில் எழுவாய் பயனிலை செயப்படுபொருள் ஆகியவற்றைக் கொண்ட வரிகள் இருக்கும். புதுக்கவிதையில் இந்த எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் தர்க்க ரீதியான வாக்கிய அமைப்பு எல்லாம் இருக்காது. இதைப் போய் எப்படி வசனம் என்று சொல்வது. உரைநடைக்கு என்று தனி இலக்கணம் இருக்கிறது. இதுதான் புதுக்கவிதையையும் உரைநடையையும் வேறுபடுத்து கிறது. பேசுகிற மாதிரி அங்கே பார்த்தேன். என்ன ஆச்சரியம்' என்று சொல்லுகிறோம். இதில் கட்டுரை அமைப்பு இல்லை. இதைத்தான் நாம் புதுக்கவிதையில் பின்பற்றுகிறோம். அங்கே பார்த்தேன் என்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒரு வரியாகப் பிரிக்கிறோம். என்ன ஆச்சரியம் என்பதற்கு அழுத்தம் கொடுக்க இன்னொரு வரியாகப் பிரிக்கிறோம். - இவ்வாறு பிரித்து எழுதுவதை பேச்சுச் சந்தம் என்று சொல்கிறோம். அதே மாதிரி குரல் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ற மாதிரி யும் பிரித்துக் கொள்ளலாம். அல்லது வேறு ஏதாவது குறிப்பாய் சொல்ல விரும்பினால் அதற்கேற்றவாறு பிரிக்கலாம். சில குறிப்பிட்ட ஒசைகளினால் சில உணர்ச்சிகளை உண்டாக்க விரும்பினால் அந்த ஒசைக்கேற்ற சொற்களாய் பொறுக்கிப் போட்டுக் கொள்ளலாம். இதுபோல் பல நுட்பங்களைப் புதுக்கவிதையில் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்தால்தான் அது புதுக்கவிதையாகிறது. ராஜ: உரைநடையை கவிதை நடையில் எழுதினால் அது வசன கவிதையாகி விடுகிறது. எதுகை மோனை இல்லாமல் சந்தத்துடன் எழுதினால் ஷேக்ஸ்பியரின் பிளேங் வெர்சாக அமைந்துவிடுகிறது. ரகுமான்: ஆமாம். பிளேங் வெர்ஸ் என்பது செந்தொடை என்று நமது பழைய இலக்கணத்திலேயே இருக்கிறது, ஆசிரியப்பாவில் எதுகைமோனை இல்லாமல் எழுதினால் செந்தொடை 137