பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்ச்சிக் களிப்பினால் கண்ணாடிகளாயின. அதிலே எனது ஆத்மா பிரதிபலித்தது உனது விரல்கள் கனன்று படர்ந்த போது மிருதுவான எனது பகுதிகள் தீப்பிடிக்க உணர்ந்தேன். உன்னை அடைந்தேன். உனது நாக்கு என் காதுகளை ஆராய்ந்தது எனது மூச்சைத்திருடியது எனது அதரங்களே என் கையை - எதிர்கொள்ளுமாறு என்னை நொறுங்க இறுக்கினாய் - துணுக்குற்றுப் பின்வாங்கினேன். 'நிறுத்தாதே!' முணுமுணுத்தாய் நீ இரத்தத்தாகங்கொண்ட வாட்கள் போல கூர் நகங்களில் உன்னைப் பற்றினேன். எனது உயிரை, உன் ஆண்மை துளைப்பதை வலியோடு கலந்த ஆசை அலையில் உணர்ந்தேன். நீ போய்விட்டாய். நாடித்துடிப்பு மீண்டும் துடிப்பதற்காக, எனது உயிர் காத்திருக்கிற போது பலவீனமான எனது மூளைக்குள் பிம்பங்கள் படையெடுத்தன. அவளிடம் என்ன கண்டாய்? என்னிடம் காணாத எதை அவளிடம் தேடிக் கண்டுபிடித்தாய்? அவள் நிலா; அவளின் கையிலிருந்து நமது மூளைக்குள் பித்தம் பொழிகிறது . உனது துரோகத்தால் நான் பைத்தியம் ஆனேன் வேறொருத்தியை ஏற்றுக்கொண்ட உனது காம வெப்பத்தில் எரிந்து தாவிப்படரும் பொறாமைத் தீயில் முழுகினேன். இந்தக் கற்பிதம், ஒரு நோய்போல் என்னைப் பீடித்தது. பிரமையிலிருந்து நுரைத்த கசப்பு ஒழுகி மூடுபனியாய் எனது தொண்டையை அடைக்கிறது எழுந்து, ஒரு மாத்திரை உட்கொண்டு 125