பக்கம்:பாரதித் தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பையன்,கல்லூரியிலே படித்துக்கொண்டிருக்கிறவன்,பழைய தொகுதிகளிலிருந்து காகிதங்களைக் கிழித்துக்கொண்டு போய்விட்டால் பிறகு அவற்றை ஈடுசெய்யமுடியாதே என்ற மாதிரி சாதாரணமாக உண்டாகக்கூடிய எண்ணமே அவருக்கு உண்டாகவில்லை.என் உள்ளத்திலே குமுறிக்கொண்டிருந்த ஆர்வத்தை அவர் நுட்பமாக எடுத்த எடுப்பிலேயே உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவு தாராளமாக,அன்போடு அநுமதி தந்திருக்க முடியாது. இந்தச் சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அவரிடத்திலே தனிப்பட்ட ஒரு நன்றி புணர்ச்சி பிறக்கின்றது.அதை எவ்வாறு வெளிப்படுத்துவதென்று எனக்குத் தெரியவில்லை.

பாரதியார் எழுதிய கவிதைகள்,கதைகள்.கட்டுரைகள் பலப்பல அந்தக்காலத்திலே நூல் வடிவத்திலே வெளி வாரமல் மறைந்துகிடந்தன. அவருடைய நூல்களில் முன்றாம் தொகுதியாக இப்பொழுதுள்ள கட்டுரைகள் என்லும் தொகுப்பு அப்பொழுது வெளியாகவில்லை. அவற்றிற்பல சுதேசமித்திரன் தினசரித்தாள்களில் புதைந்துகிடந்தன. அவையல்லாத வேறு கட்டுரைகளும் இருந்தன.சுதேசமித்திரன் வார மும்முறைப் பதிப்பொன்றும் பல ஆண்டுகள் வெளியாயிற்று.அதிலும் பாரதியார் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவற்றையெல்லாம் ஒன்று விடாமல் திரட்டிவிட வேண்டும்” என்று நான் துடித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது வனமலர்ச்சங்கம் என்ற ஒரு சங்கத்தைக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் ஆரம்பித்திருந்தோம். சென்னை, திருச்சி, மதுரை முதலிய நகரங்களிலும் பிற இடங்களிலும் அதற்குக்கிளைச் சங்கங்கள் இருந்தன.நாட்டு விடுதலை,சுதேசி இயக்கம்,தமிழ் இல்க்கியம் இவற்றில் ஆர்வம் உள்ள கல்லூரி மாணவர்களே வனமலர்ச் சங்கத்தின் அங்கத்தினர்களாக் இருந்தார்கள்.வனமலர்ச் சங்கத்தின் ஆதரவில் பித்தன் என்ற பத்திரிகை ஒன்றை நாங்கள் ஆரம்பித்தோம். முதலில் அது கையெழுத்துப் பத்திரிகையாக மாதம் ஒரு முறை வெளியாயிற்று. அங்கத்தினர்கள் அதிகரிக்கவே கையால் எழுத முடியவில்லை. சைக்லோஸ் டைல் பிரதிகள் எடுத்து வெளியிட்டோம்.விக்டோரியா ஹாஸ்டலில் எனது அறையில் சைக்லோஸ்டைல் வேலை சதா நடந்துகொண்டிருந்தது. பிறகு அந்த முறையாலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/9&oldid=1540052" இலிருந்து மீள்விக்கப்பட்டது