பக்கம்:பாரதித் தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பாரதி தமிழ்


அதை அச்சிட்டுப் பிரசுரப்படுத்துவோரான ஸ்ரீ நிவாசய்யங்காரைக் கைதிப்படுத்தி விசாரணை செய்ததில் ஐகோர்ட்டில் அவருக்கு ஐந்து வருஷ தீபாந்திர சிஷை விதிக்கப்பட்டது. இப்படி விதிக்கப்படுமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ராஜத் துவேஷக் குற்றம் செய்ததாகக் கவர் மெண்டார் யாரை நினைக்கிறார்களோ அவர்களைப் பிடித்து விசாரணைக்குக் கொண்டு வருவதும், ஜட்ஜுகள் கொடுந் தண்டனை விதிப்பதும் இப்போது சாதாரணமாய்விட்டது. குற்றஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அவசியம் என்று எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்; ஆனால் ராஜத் துவேஷக் குற்றஞ் செய்கிறவர்கள் படித்தவர்களாயும், கெளரவமான நிலைமையில் இருப்பவர்களாயும் இருப்பதால், அவர் களிடத்தில் கவர்மெண்டாரும், ஜட்ஜிகளும் அவ்வளவு கொடுமை காட்டாமல் இருக்கக்கூடும். ஸ்ரீ நிவாசய்யங்கார் குற்றமுள்ள வியாசங்களை எழுதினவரல்ல; எழுதினவரும், அந்தப் பேப்பருக்குச் சொந்தக்காரரும் அகப்படாமல் மறைந்து போனார்கள்.ஸ்ரீ நிவாசய்யங்கார் பெயர் போலீஸ் கமிஷனர் ஆபீசில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அவர் அகப்பட்டுக் கொண்டாரேயன்றிக் குற்றத்துக்கு முதல் உத்தரவாதம் அவ்ர் பேரில் தங்கியதல்ல. இந்த ஒரு காரணத்தினாலேயே அவருக்குக் கொடுந்தண்டனை விதிக்காமல் இலகுவான தண்டனை விதித்திருக்கக்கூடும். அல்லது இந்தியா பத்திரிகையில் ராஜத் துவேஷக் குற்றமுள்ள வியாசங்கள் தோன்றின துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித் திருந்தார்களானால் இப்போது ஒடிப் போயிருக்கிற எடிடரும் புரொப்ரைட்டரும் அப்படிப்பட்ட வியாசங்கள் தோன்ற இடங் கொடுத்திருக்க மாட்டார்கள் அவைகளால் விளையும் தீங்கும் குறைந்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/76&oldid=1539732" இலிருந்து மீள்விக்கப்பட்டது