பக்கம்:பாரதித் தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாரின் பத்திரிகைத் தொண்ரு


பாரதியார் 1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு வந்து சுதோமித்திரனில் உதவியாசிரியராகச் சேர்ந்தார். அந்த சமயத்தில் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட அவருக்கு அதிகம் வாய்ப்பு இருக்கவில்லை. சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்தே சக்கரவர்த்தினி என்ற மாத இதழும் வெளியாயிற்று. அதற்கு பாரதியார் ஆசிரியரானார். 1905 நவம்பர் மாதத்தில் வெளியான அதன் இதழிலிருந்து வந்தே மாதரம் என்ற பாரதியாரின் கட்டுரை 28-12-1905 சுதேசமித்திரன் இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.இப்பத்திரிகை எவ்வளவு காலம் நடைபெற்றதென்று தெரியவில்லை. இதில் பாரதியாரால் எழுதப்பட்ட “வியாசங்களும் பாடல்களும் புதுமணம் கமழ்ந்து யாவராலும் விரும்பப்பட்டன” என்று திரு. எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு சென்றுபோன நாட்கள் என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

1906-ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தியா வாரஇதழ் தொடங்கிற்று. இதன் சொந்தக்காரர் மண்டயம் குடும்பத்தைச் சேர்ந்த நா. திருமலாச்சாரிவார் என்பவர்.

ஸ்வதந்திரம், ஸ்மத்துவம், ஸ்ஹோதரத்வம் அதனுடைய லட்சியம். தனிப்பிரதி விலை அணா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/71&oldid=1539783" இலிருந்து மீள்விக்கப்பட்டது