பக்கம்:பாரதித் தமிழ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வங்கமே வாழிய 91

பட்டமளிக்கப்பட்டிருப்பதிலிருந்தும் இவர் இளமையிலேயே பல பாடல்கள் பாடியிருக்கலாம் என்று அறியலாம். ஆனல் அப்பொழுது பாடிய பாடல்களில் ஏதாவது அவரது கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளதா என்று நிச்சயிக்கமுடியவில்லை. ‘அண்ணுமலை ரெட்டியாரைப் போல அழகாக யாராவது இக்காலத்தில் காவடிச்சிந்து பாடமுடியுமா?’ என்று எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் ஒரு சமயம் கேட்டதாகவும், அவர்களுக்குப் பதில் கூறும் வகையில் பாரதியார் முருகக்கடவுளின்மேல் காவடிச் சிந்தொன்றைப் பாடினரென்றும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.அதில் ஒரு சரணம் மட்டும் கிடைத்துள்ள தாக வெளியாகியுள்ளது. அது வருமாறு:

பச்சைத் திருமயில் வீரன், அலங் காரன், கெளமாரன்-ஒளிர் பன்னிரு திண்புயப் பாரன்-அடி பணி சுப்பிர மணியர்க் கருள், அணி மிக்குயிர் தமிழைத் தரு பக்தர்க் கெளியசிங் காரன்-எழில் பண்ணு மணுசலத் துாரன்

மதுரையிலிருந்து வெளியான விவேகபாரு என்ற மாத இதழில் 1904 ஜூலை வெளியீட்டில் கீழ்க்கண்ட பாடல் வெளியாகியுள்ளது.

தனிமையிரக்கம் குயிலனய்! நின்னெடு குலவியின் கலவிபயில்வதிற் கழித்த பன்னுள் நினைந்துபின் இன்றெனக் கிடையே எண்ணில் யோசனைப் படும் குன்றமும் வனமும் கொழி திரைப்புனலும் மேவிடப் புரிந்த விதியையும் நினைந்தால் பாவியேன் நெஞ்சம் பகீரெனல் அரிதோ? கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/90&oldid=1539817" இலிருந்து மீள்விக்கப்பட்டது