பக்கம்:பாரதித் தமிழ்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பாரதி தமிழ்

“ ---- مم-- ببعد مہم۔. - ح - ماہ . . .----ایس۔

துக் கொண்டிருந்தேன். ஸாதாரணமாக மரங்கள் மனிதரைப் போலவே பகல் முழுவதும் விழித்துக் கொண்டிருக்கும். இரவானவுடனே தூங்கும். அன் றிரவு எனக்கு எந்தக் காரணத்தாலோ தூக்கமே வரவில்லை. நிலாவையும், வானத்தையும், சூழ்ந்திருக் கும் மரங்களையும் பார்த்துக்கொண்டு பிரமாநந்தத் தில் மூழ்கியிருந்தேன். அப்போது பதினறு வய துடைய, மிகவும் அழகான மனித ஆண் பிள்ளை யொருவனும், அவனைக் காட்டிலும் அழகான பன்னிரண்டு வயதுடைய மனிதப் பெண் ஒருத்தியும் அதோ தெரிகிற நதியில் விளையாடிக் கொண்டிருப் பதைக் கண்டேன். சிறிது நேரத்துக்குள்ளே அவ் விருவரும் єтутLотвѣтии மனிதரில்லையென்பது எனக்குத் தெளிவாய்விட்டது. சிறகுகளில்லாமல் அவர்கள்: வானத்தில் ப ற ந் து விளையாடுவது கண்டேன். பிறகு ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகளிலிருந்து அவர்கள் இன்னரென்று தெரிந்துகொண்டேன். அவ்விருவரும் யாரெனில் அகஸ்த்ய மஹரிஷியும் தாம்ரபர்ணியம்மனும். அகஸ்த்யர் ஸாதாரண காலத்தில் கட்டை விரலள வுடைய வடிவந் தரித்திருப்பது வழக்கம். ஆனல் அவர் காமரூபி. அதாவது, நினைத்தபோது நினைத்த வடிவந் தரிக்கும் திறமை படைத்தவர். தாம்ர பர்ணியம்மனும் அப்படியே. ஆதலால் அவ்விருவரும் அப்போது அதி சுந்தரமான மனுஷ்ய ரூபந்தரித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கிரீடை பொழுது விடியும் வரை நடந்தது. அப்பால் தாம்ரபர்ணி மறைந்துவிட்டாள்........ p :

வேப்பமரம் சொல்லுகிறது:- கே ளா ய், மானுடா, கவனத்துடன் கேள். தாம்ரபர்ணியம்மன் பகலைக் கண்டவுடன் மறைந்து சென்று விட்டாள் அகஸ்த்யர் மாத்திரம் தனியாக வந்து எனதடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/323&oldid=605692" இலிருந்து மீள்விக்கப்பட்டது