பக்கம்:பாரதித் தமிழ்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேசக் கrயாரின் முட பக்தி 445

ஸ்மாஜத்தின் தீர்மானங்களை ஜெர்மானியர் ஒப்புக் கொள்வாராயின் பிறகு லண்டன் சபைக்கு அவர் களைப் பிரதிநிதிகளனுப்பும்படி கேட்கவேண்டு மென்பது மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜின் கருத்து. ஆனல் அதன் ஸம்பந்தமான அழைப்புக் கடிதம் இன்னும் தங்கள் வசம் கிடைக்கவில்லையாதலால், அந்த ஸ்பையில் சேர்வதா, அல்லது அதை பஹறிஷ்காரம் செய்வதா என்பதைக் குறித்து இன்னும் ஜெர்மானியர் நிச்சயமுரைக்க இயலா தென்று வோன் ஸி மோன்ஸ் கூறினர். ஆயினும், நேசக் கrயாரின் தீர்மானங்களை ஆதாரமாகக் கொண்டு மேலே விவாதங்கள் நடத்துவது ஸாத்ய மில்லை யென்றும், அத்தீர்மானங்களுக்கெதிரிடை யாக ஜெர்மானிய ஆலோசனைகளை வெளியிடப் போவதாகவும் அந்த மந்திரி தெரிவித்தார்.

நேசக் கrயாரின் பரீஸ் தீர்மானங்களின்படி ஜெர்மனி நாற்பத்திரண்டு வருஷங்களில் இருபத் தீராயிரத்து அறுநூறு கோடி (226000,000,000) தங்க ‘மார்க்’ அல்லது முந்நூராயிரங் கோடி (3000,000,000,000) காயித “மார்க்’ செலுத்த் வேண்டுமென்றும், அதனுடனே, இன்னும் 42 வருஷங்கள் வரை ஜெர்மனியின் ஏற்றுமதிகளின் கிரயத்தில் 100-க்கு 12 வீதம் செலுத்திக்கொண்டு வரவேண்டு மென்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. பிந்திய வகையில் இன்னும் ஒரிரண்டாயிரம் கோடி “மார்க்’ அதிகமாகத் தட்டலாமென்று நேசக் கrதியார் நினைப்பதாக வோன் ஸி மோன்ஸ் சொல் லியபோது ரெயிக் ஸ்தாக்-அங்கத்தினர் நகைத்தார் களென்று ராய்ட்டர் தந்தி தெரிவிக்கிறது. இதினின் றும் ஜெர்மானியர் நஷ்டஈட்டுத் தொகை செலுத் தும் விஷயத்தில் நேசக் கrயாரின் கட்டளையை உடனே எதிர்ப் பேச்சில்லாமல் நிறைவேற்றுவார்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/444&oldid=605880" இலிருந்து மீள்விக்கப்பட்டது