பக்கம்:பாரதித் தமிழ்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோத விஷயங்கள் 383

சொல்லியது போல் இப்போது ஐர்லாந்தில் நடை பெறும் ஆங்கில ஆட்சி முறையில் ராணுவச் சட்டத் தைக் கொண்டு சேர்த்தல் மிகையாகு மென்று தோன்றுகிறது. ராணுவச் சட்டத்தின் ஆதிக்கத் தில் ஐரிஷ் ஜனங்களின் ஸ்வதந்த்ரங்களை இப்போ தைக் காட்டிலும் அதிகமாகக் கட்டுப்படுத்த முடியு மென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் நினைக்கிருரா?

3. ப்ரான்ஸ் தேசத்தின் குட்டிக்காணம்

ப்ரான்ஸ் தேசத்து வியாபாரிகளும் தொழிற் சாலைத் தலைவர்களும், ருஷ்யாவுடன் வியாபார ஸம்பந்தங்களேற் படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்துவிட வேண்டுமென்று ப்ரெஞ்ச் கவர்ன் மெண்டார் முடிவான தீர்மானஞ் செய்துவிட்டதாக ராய்ட்டர் தந்தி யொன்று தெரிவிக்கிறது. எனவே இங்கிலாந்தும் போல்ஷ்விக்கர்களுடன் வியாபாரம் பண்ணுவதாகச் செய்து கொண்ட தீர்மானம் உறுதியாய் விடுமென்பதில் ஸந்தேஹமில்லை. இங் ங்ணம் ருஷியாவுடன் ஆங்கிலேயர் வியாபாரஞ் செய்யலாகா தென்று வற்புறுத்துவதில் லண்டன் டைம்ஸ்’ பத்திராதிபர் முதலிய ஆங்கிலத் தலைவர் பலர் மிதமிஞ்சிய காகிதமும், மையும், நேரமும் செல விட்டிருக்கிரு.ர்கள். காலக் கிரமத்தில் நடந்து தீர வேண்டிய கார்யமொன்றை மேற்படி “டைம்ஸ்’ பத்திராதிபர் முதலாயினேர் வீணுகக் கடத்திக் கொண்டு போக முயற்சி புரிந்தனர். இன்றைக் கில்லாவிட்டால் நாளை அல்லது மறுநாள், அல்லது அதற்கடுத்த நாள், ருஷியாவுடன் வியாபாரந் தொடங்குதல் இன்றியமையாததாய் விடும். ருஷியா சிறிய தேசமா? ஐரோப்பாவில் முக்காற் பங்கு ருஷியா. அந்த தேசத்தை எத்தனை காலம் ஜாதி ப்ரஷ்டம் பண்ணி வைக்க முடியும்? அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/382&oldid=605783" இலிருந்து மீள்விக்கப்பட்டது