பக்கம்:பாரதித் தமிழ்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 பாரதி தமிழ்

போல் எகிப்து பண வரவுள்ள பூமியில்லை. மெஸ்ப டோமியாவை விழுங்கியதற்கு இஃதொரு பரிஹா ரம் போன்றதாய் முஸல்மான்களை நமக்கு வசப் படுத்தக் கூடும். ஸுயேஸ் கால்வாய்தான் எகிப் திலே,ஸாராம்சம். அதை நாம் வைத்துக்கொண்டாய் விட்டது. மேலும் நமது படை எப்படியேனும் எகிப்திலிருக்குமாதலால், எகிப்து தேசத்து ராஜாங் கத்தாரை ஸ்வாதீனங் கொடுத்த பின்னரும், நமது கைப் பொம்மைகளாக நம் இஷ்டப்படி ஆட்டிவர லாம். இப்போதைக்கு ப்ரான்ஸ், அமெரிகா முதலிய நேச கோடிகளின் வயிற்றெரிச்சலுக்கு இஃதோர் ஆறுதல் போலாகக் கூடும். தவிரவும், அந்த தேசம் விடுதலைக்காக எப்பாடும் படக்கூடிய நிலைமையிலிருக் கிறது. என, இங்ஙனம் பல காரணங்களே உத் தேசித்து ஆங்கில மந்திரிகள் ஆரம்பத்தில் எகிப்துக்கு ஸ்வாதீனங் கொடுப்பதாகிய இதிஹாஸத்தை ப்ரசுரப் படுத்தினர்கள். பின்னிட்டு, “நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கிறது.’ என்ன செய்யலாம்? லாய்ட் ஜ்யார்ஜ் உபதேசம் பண்ணு கிறார். கடவுள் தீர்ப்புப் பண்ணுகிரு.ர்.

எதிர்பாராத விளைவுகள்

ஆங்கில மந்திரிகள் தினை விளைத்தோ மென்று கருதித் தினையறுக்கச் சென்ற இடத்தே பனை முளைத் திருக்கிறது. எகிப்துக்கு இவர்கள் ஸ்வாதீன விளம் பரம் செய்ததினால், முஸ்லிம் உலகத்தின் கோபம் ஆறவில்லை. முன்னிலும் அதிகமாகக் கொதித் தெழுந்தது. எகிப்தை விடப் போகிறார்களா? வாஸ்தவந்தான். துருக்கியை ஏன் விடவில்லை? விடுவிக்கவில்லை? ம்ெஸ்பொடோமியாவை, ஸிரி யாவை ஏன் விடவில்லை? விடுவிக்கவில்லை? பாரஸி கத்தை ஏன் விழுங்க முயன்றார்கள்? அரபியாவை ஏன் விழுங்க முயலுகிரு.ர்கள்? இந்தியாவுக்கு விடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/419&oldid=605841" இலிருந்து மீள்விக்கப்பட்டது