பக்கம்:பாரதித் தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான்

17 செப்டம்பர் 1906 பராபவ புரட்டாசி 2

அருளா லெவையும் பார் என்றான்-அதை அறியாதே சுட்டியென் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லால்-கண்ட என்னேயுங் கண்டிலே னென்னடி தோழி!

-தாயுமானவர்

ஆயிரங் கோடி அறிஞர்கள் பற்பல ஆயிர யுகங்க ளாராய்ந் தறிகிலா ‘யான் உடை யியற்கை யானே அறிவன்! மீனுணர்ந் திடுங்கொல் வியன்கடற் பெருமை? அருள்வழிக் காண்கென் றருளினர் பெரியோர்: மருள்வழி யல்லான் மற்றாென் றுணர்கிலேன்! அகிலமும் யான்’ என ஆன்றாே ரிசைப்பர் மகிதலத் திருளின் மண்டிய மனத்தேன் யானதை யொரோவழிக் கண்டுளேன். எனினும் மாணத ஒளியது மங்குமோர் கணத்தே யானெனும் பொருள்தான் என்னகொல்? அதனையில் வூனெனக்கொள்வ ருயிரிலார் சிலரே. “பிரமமே யானெனப் பேசுவர் பேசுக! tபிரமமே யானெனப் பேசினர் பெரியோர்.

-சி. சுப்பிரமணிய பாரதி

‘ப்ரம்மம் அல்லது ப்ரமை. “கானென்னும் உணர்ச்சியே தப் புணர்ச்சி.

fப்ரம்மம் அல்லது முதற் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/110&oldid=605357" இலிருந்து மீள்விக்கப்பட்டது