பக்கம்:பாரதித் தமிழ்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பாரதி தமிழ்

வருஷத்துக்கு ஸ்மீபத்தில், ஒரு நாள் என் சட்டைப் பையிலிருந்த பணம் களவு போயிற்று. களவு செய்த மனிதன் அகப்பட்டான். அவன்மீது நியாய ஸ்தலத் தில் வழக்கு நடந்தது. நானும் நியாயஸ்தலத்துக் குப் போயிருந்தேன். அப்போது அந்தத் திருடன் மீது நியாய ஸ்தலத்தில் வாசிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை பின்வருமாறு தொடங்கிற்று:-ஹென்ரி பாஸ்ட் என்பவரின் உடமையாகிய மிலிஸென்ட் பாஸ்ட் என்ற ஸ்திரீயிடமிருந்து டாம் ஜோன்ஸ் என்பவன் ஒரு பணப் பையைக் களவு செய்ததாகக் குற்றஞ் சாற்றப் படுகிருன் என. நான் ஏற்கெனவே ஸ்திரீகளுக்கு ஸ்வதந்த்ரம் வேண்டுமென்ற கrதி யைச் சேராதிருந்தேளுயின், என்னை ‘உடைமை'ப் பொருளாக வர்ணித்த அந்த வாக்கியம் என்னை உறுதியாக அந்தக் ககதியில் கொண்டு சேர்த்திருக் கும்’-என்று அந்தப் பண்டிதை கூறுகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/397&oldid=605806" இலிருந்து மீள்விக்கப்பட்டது