பக்கம்:பாரதித் தமிழ்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 பாரதி தமிழ்

செய்த போதிலும் இப்போது நாம் சரியான நிலைமையிலில்லாதிருப்போமானுல் நமது பண்டைக் காலப் பெருமை யாருக்கும் நினைப்பிராது. இன்று மீண்டும் நமது தேசம் அபூர்வமான ஞானத் திகழ்ச்சி யும் சக்திப் பெருக்கமும் உடையதாய்த் தலை தூக்கி நிற்பதே நமது பெருமையைக் குறித்து பூரீமான் க்ளெமான்ஸோ முதலியவர்கள் மேலே காட்டியபடி பூவித்துப் பேசக் காரணமாகிறது. எனினும், நாம் உலகத்திற்குப் புது வழி காட்டத் தகுதி யுடையோமென்பதை ருஜுப்படுத்தி யிருக்கிருேமே யன்றி இன்னும் அந்த ஸ்தானத்தில் நாம் உறுதி பெறவில்லை. மேற்குத் திசையிலிருப்பது போலவே இங்கும் மனிதர். பர்ஸ்பரம் அன்பு செலுத்தும்படி விதித்த கடவுளின் கட்டளையை மறந்து, ஒருவருக் கொருவர் விரோதிப்பதையும் கொலை புரிவதையும் கண்டு நான் வ்யஸ்ன்ப் படுகிறேன்’ என்று பூரீ க்ளெமான்ஸோவே சொல்லியிருக்கிறார். ஆனல் இந்த ஸ்மயத்தில் இந்தியாவில் பரவிவரும் லாத்விக தர்மக் காற்றை சுவாஸியாமலிருப்பாராளுல், இ க்ளெமான்ஸ்ோவின் வாக்கில் இந்த வார்த்தை உதித்தே யிராதென்று நான் நிச்சயம்ாகக் கூறுவேன். இப்போது பூரீ க்ளெமான்ஸ்ோ பரீஸ் நகரத்திலிருந் தால் அங்கு மறுபடி வீசி வரும் ஜெர்மானிய விரோதக் காற்று இவரையும் தாக்கி, இவருடைய புத்தி ஸாத்விக நெறிகளிலே செல்ல இடங் கொடுத்திராது. எனவே, இந்தியா அன்பு நெறி யால் வலிமை யோங்கி உலகை நடத்த வேண்டு மென்ற கொள்கையை ஆசரிக்கத்தொடங்கிவிட்டது. இந்த ஆசாரத்தின் ஆரம்பக் கலைகளே மிகவும் ஆச்சர்யமாக, உலகத்தாரெல்லாருங் கண்டு வியக்கும் படி யிருக்கின்றன. இனி இக் கொள்கை இந்தியா வில் மக்களுக்குள்ளே எல்லா வாழ்க்கைத் துறை களிலும் பூர்ணமாக ஸ்தாபிக்கப்பட்டு விளங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/429&oldid=605856" இலிருந்து மீள்விக்கப்பட்டது