பக்கம்:பாரதித் தமிழ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாசிகளின் நிதானமும் வியின சந்திரபாலரின் சந்நிதானமும்

18 Guo 1907 பில வங்க வைகாசி 3

சென்னை வாசிகளின் நிதானமெல்லாம் சந்திர பாலரின் சந்நிதானத்திலே பறந்து காற்றாய்ப் போய் விட்டது. நேற்று மாலை விக்டோரியா நகர மண்ட பத்தில் லாலா லஜபதிராய் தீபாந்தரத்திற்கேற்றி அனுப்பப்பட்ட விஷயமாக மஹாஜன சபையாரால் கூட்டப்பெற்ற பெருங் கூட்டத்தில் நடந்த செய்தி களை நேரே வந்து கண்டவர்களெல்லாம் இனி மயிலாப்பூர் வக்கீல்கள் ஜனத் தலைவர்களென்று மூச்சு விடக்கூட இடமில்லையென்பதை நன்முக அறிந் திருப்பார்கள்.

நேற்று மாலை மீட்டிங்கிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின் வருவன வாகும்:

1. இதுவரை பழைய கட்சிக்காரருக்கு முக்கிய தர்மமாக இருந்த விண்ணப்ப முறைமையை நேற்று அவர்கள் தாமாகவே பேதமையாகுமென்று நிறுத்தி விட்டனர்.

2. அப்படி அவர்கள் விண்ணப்பம் செய்ய விரும்பாதபோதிலும் வெறுமே இந்தியா மந்திரிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/116&oldid=605366" இலிருந்து மீள்விக்கப்பட்டது