பக்கம்:பாரதித் தமிழ்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாஸ்யம்

காளிதாஸன்

10 பிப்ரவரி 1921 ரெளத்திரி தை 29

பத்திரிகைகளில் ‘பால்’ வேற்றுமை

உயிரில்லாத வஸ்துக்களுக்குக்கூட ஆண்பால், பெண்பால் கற்பித்தல் கவிகளின வழக்கம். ஸ்ம்ஸ் க்ருதம் முதலிய புராதன பாஷைகள் சிலவற்றிலும், ப்ரெஞ்சு, ஹிந்தி முதலிய நவீன பாவுைகள் சில வற்றிலும், பெரும்பான்மையான பொருட் பெயர் களுக்கு மட்டுமேயன்றி, குணப் பெயர்களுக்குங் கூடப் பால் வேற்றுமைகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த பாஷைகளைக் கற்போர் சொற்களில் இறுதி யெழுத்துக்களைக் கொண்டும், நெடுங்கால அனுபவத் தைக் கொண்டும் இன்ன சொல் இன்ன பாலைச் சேர்ந்ததென்று நிர்ணயித்துக் கொள்ளுகிறார்கள். ஆனல் தமிழ், இங்கிலிஷ் முதலிய பெரும்பான்மை யான பாஷைகளில் இந்தக் கஷ்டம் கிடையாது. “மக்கள், தேவர், நரகர் உயர் திணை. மற்றுயி ருள்ளவும், இல்லவும் அஃறிணை’ என்ற தமிழிலக்கண விதியே பொதுவாக எல்லா பாஷைகளுக்கும் பொருந்தி நிற்கிறது. எனினும், இப்போது சிறிது காலமாகத் தமிழிலேயே, பத்திரிகைகளின் பெயர் களுக்குச் சிலர் ஆண்பால், பெண்பால் வகுக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/437&oldid=605869" இலிருந்து மீள்விக்கப்பட்டது