பக்கம்:பாரதித் தமிழ்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 பாரதி தமிழ்

புதிய ஸெளகர்யங்களேற் படுவதுடனே பணப் பழக்கத்தால் இயன்று வரும் பழைய ஸெளகர்யங் களுக்கு இடையூறில்லாமல் செய்து விடக் கூடு மால்ை, ருஷியாவை இவ்விஷயத்தில் உலகத்தார் பின்பற்ற முய்ல்வார்களென்பதில் ஸந்தேஹமில்லை. லென்ட் நிஹல்ஸிங் சொல்வது

பூரீமான் ஸென்ட்-நிஹல்ஸிங் பால் மால்’ கெஜட்டின் தலையங்கப் பக்கத்தில் எழுதியிருக்கும் வ்யாஸ் மொன்றில் நம் எதிர்கால வைஸ்ராயாகிய லார்டு ரீடிங்குக்குச் சில புத்தி வசனங்கள் சொல்லி யிருக்கிறார். ப்ரிடிஷார் மீட்டு மிட்டும் வாக்குறுதிகள் செய்து அவற்றை உடைப்பதினின்றும் இந்தியாவில் அமைதி ஏற்படாதென்று பூரீமான் ஸிங் எச்சரிக் கிரு.ர். இந்தியச் சட்டப் புஸ்தகத்திலுள்ள அடக்கு முறைச் சட்டங்களையும் உத்தரவுகளையும் அறவே ஒழித்து விடுவதாக லார்ட் ரீடிங் இந்தியாவில் இறங் கியவுடனே உறுதி மொழி கொடுக்க வேண்டு மென்று ரீமான் ஸிங் விரும்புகிறார். அவ்வுறுதி மொழியை விரைவில் நிறைவேற்றவும் வேண்டு மென்கிறார். ரெளலட் சட்டத்தையும், இந்தியாவில் பேச்சு ஸ்வதந்த்ரத்தையும் பத்திரிகை ஸ்வதந்த்ரத் தையும் சுருக்கக்கூடிய மற்றச் சட்டங்களையும் அழிக்கும்படி சிபாரிசு செய்கிரு.ர். இந்தியர்களின் ஸ்ம்மதத்தின்மீது இந்தியாவை ஆளுவதாக ப்ரிடி ஷார் ஒருபுறம் கதை சொல்லிக் கொண்டு மற்றாெரு பக்கத்தில் அடக்கு முறைகளை நடத்திக் கொண் டிருந்தால், ப்ரிடிஷ் வாக்குறுதிகளை இந்தியர் நம்பு தல் ஸாத்யப்படாமற் போகுமென்பதைக் குறிப்பிடு கிறார். இவ்விஷயம் ராய்ட்டர் தந்தி மூலமாக இந் தியாவுக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனல் பூரீமான் ஸிங் சொல்வதை இங்கிலாந்திலுள்ள சிலர் ஆதரிக்கக் கூடுமெனினும், இங்குள்ள அதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/481&oldid=605938" இலிருந்து மீள்விக்கப்பட்டது